உ.பி. கலவரத்தில் 21 பேர் பலி- ஊரடங்கு உத்தரவு!
முசாபர்நகர் : உத்தரபிரதேசம் முசாபர்நகர் மாவட்டத்தில் இருபிரிவினர் இடையே ஏற்பட்ட கலவரம் தொடர்ந்து பல பகுதிகளில் பரவுகிறது; இதுவரை பலியானோர் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது. ஏராளமானோர் காயம் அடைந்தனர். கலவரத்தை கட்டுப்படுத்த ராணுவத்தினர் நேற்று கொடி அணிவகுப்பு நடத்தினர். உத்தர பிரதேசம் முசாபர்நகர் மாவட்டம், கவல் கிராமத்தில் கடந்த ஆகஸ்ட் 27ம் தேதி அன்று, ஒரு பிரிவைச் சேர்ந்த இளம் பெண்ணை, மற்றொரு பிரிவைச் சேர்ந்தவர்கள் கேலி செய்துள்ளனர்.
இதை சிலர் தட்டிக் கேட்ட போது இரு பிரிவினர் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் 3 பேர் பலியாயினர். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வந்தது. அங்கு தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு, கலவரத்துக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தன.
இந்நிலையில் தடை உத்தரவை மீறி, நகலாபத்ஹுட் என்ற இடத்தில் நேற்று முன்தினம் பஞ்சாயத்து கூட்டம் நடந்தது. இதில் 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். கொலை செய்யப்பட்ட 3 பேருக்கு நியாயம் கிடைக்க வேண்டும் எனவும், போலீசார் பதிவு செய்த வழக்குகளை வாபஸ் பெற கோரிக்கை விடுக்கவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இந்த கூட்டத்தை முடித்துக் கொண்டு திரும்பியவர்கள், மற்றொரு பிரிவினருக்கு எதிராக கோஷம் எழுப்பினர். இதனால் இரு பிரிவினர் இடையே நேற்று முன்தினம் மீண்டும் மோதல் ஏற்பட்டது.
இத்தகவல் பக்கத்து கிராமங்களுக்கும் பரவி வன்முறை வெடித்தது. இரு தரப்பினரும் கடுமையாக மோதிக் கொண்டனர். இதில் 9 பேர் பலியாயினர். இந்த கலவரத்தில் தனியார் டி.வி. கேமராமேன் ஒருவரும், போலீசார் நியமித்திருந்த போட்டோகிராபரும் பலியாயினர். இந்நிலையில் இப்பிரச்னை தொடர்பாக நேற்று மேலும் 6 கிராமங்களில் கலவரம் பரவியது. இதில் 9 பேர் பலியாயினர். இதுவரை முசாபர்நகர் கலவரத்தில் பலியானோர் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது என மாவட்ட கலெக்டர் கவுசல்ராஜ் சர்மா கூறியுள்ளார். பலரை காணவில்லை என்பதால் பலி எண்ணிக்கை உயரும் என கூறப்படுகிறது.
கலவரம் நடந்த கவல், குட்பா, கோட்வாலி, நயி மண்டி, யதால் சிசாலி, ஷாபூர், பக்னா, கலாபர், தாராகலா, புவனா, பாசிகலா ஆகிய பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அங்கு ராணுவத்தினர் 800 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் நேற்று கொடி அணிவகுப்பு நடத்தினர். ஒரு இடத்தில் ராணுவத்தினர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதனால் ராணுவத்தினர் பதிலுக்கு துப்பாக்கி சூடு நடத்தினர். ராணுவம் தவிர போலீசார் 12 ஆயிரம் பேரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். போலீசார் வீடுவீடாக சோதனை நடத்தி, ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். கலவரத்தில் ஈடுபட்ட 30 பேரை போலீசார் கைது செய்தனர். தற்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
கலவர நிலவரம் குறித்து உத்தரப் பிரதேச அரசுடன் உள்துறை அமைச்சகம் ஆலோசனை நடத்தி தேவையான உதவிகளை செய்து வருகிறது. இது தொடர்பாக முதல்வர் அகிலேஷ் யாதவுடன், உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே பேசினார். கலவரத்தை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ள மத்திய அரசு, இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது.
மக்கள் அமைதி காக்க வேண்டும் எனவும் கலவரத்தை தூண்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆளும் சமாஜ்வாடி கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. சட்டம் ஒழுங்கை கட்டுப்படுத்த சமாஜ்வாடி தவறிவிட்டது என பகுஜன்சமாஜ் கூறியுள்ளது. மதக்கலவரத்தை சமாஜ்வாடி தூண்டுவதாக பா.ஜ.வும் குறை கூறியுள்ளது. ‘‘உ.பி.யில் பகுஜன் சமாஜ் ஆட்சியைவிட, சமாஜ்வாடி ஆட்சியில்தான் வன்முறை சம்பவங்கள் அதிகளவில் நடக்கிறது’’ என காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் திக்விஜய் கூறியுள்ளார். ‘‘கலவரத்தை கட்டுப்படுத்த தவறிய அகிலேஷ் யாதவ் அரசை ஜனாதிபதி டிஸ்மிஸ் செய்ய வேண்டும்’’ என விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் செய்தி தொடர்பாளர் பிரகாஷ் சர்மா கூறியுள்ளார்.

எதிர்கட்சிகளின் கடும் விமர்சனத்தையடுத்து, சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ் தனது வீட்டில் நேற்று மாலை அவசர கூட்டத்தை கூட்டினார். இதில் முதல்வர் அகிலேஷ்யாதவ், அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கலவரம் சம்பவம் துரதிர்ஷடமானது என குறிப்பிட்ட முலாயம், சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட கடும் நடவடிக்கை எடுக்கும்படி அறிவுறுத்தினார்.

Category: மாநில செய்தி

0 comments