.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

பாகிஸ்தான்: பலுசிஸ்தான் பூகம்பத்தில் 208 பேர் பலி

Unknown | 10:34 PM | 0 comments

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் பூகம்பத்தில் பலியானோர் எண்ணிக்கை 208 ஆக அதிகரித்துள்ளதாகவும், பலர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாகிஸ்தானில் நேற்று மாலை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட ஆவாரன் மாவட்டத்தில் மட்டும் 80 பேர் பலியானதாக துணை ராணுவப் படையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

வீடுகளும் கட்டடங்களும் அதிக எண்ணிக்கையில் இடிந்து விழுந்துள்ளதால், இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தொடர்ந்து ராணுவம் ஈடுபட்டு வருகிறது.
மீட்பு நடவடிக்கைகள் முழுமையாக முடியாததால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் மையம் கொண்டு நேற்று மாலை ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 7.7 ஆக பதிவானது. இதன் தாக்கத்தால், வட இந்திய பகுதிகளிலும் நில அதிர்வு உணரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1