.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

பெரம்பலூர் மாவட்டத்தில் ரூ.1¾ கோடி செலவில் கட்டப்பட்டுள்ள பல்வேறு அரசு துறை கட்டிடங்கள் முதல்வர் ஜெயலலிதா காணொலிகாட்சி மூலம் திறந்து வைத்தார்

Unknown | 9:47 PM | 0 comments


பெரம்பலூர், செப்.18-
தமிழக முதலமைச்சர் பெரம்பலூர் மாவட்டத் திற்கென்று ரூ.1கோடியே 81 லட்சம் மதிப்பிலான துணை ஆட்சியர் குடியிருப்பு, வருவாய் ஆய்வாளர் குடியிருப்பு மற்றும் காவல் நிலையங்களுக்கான கட்டிடங்களை தலை மைச் செயல கத்திலிருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
காவல்துறை- வருவாய்த்துறை
நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலை நாட்டுவதிலும், குற்றங் களை தடுப்பதிலும், மாநிலத் தில் அமைதியான சூழ் நிலையை உறுதி செய்வதிலும் காவல்துறை முக்கிய கடமையாற்றுகிறது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த காவல்துறையின் பணிகள் மேலும் மேம்படும் வண்ணம் பல்வேறு முனைப்பான நடவடிக்கை களை தமிழக முதலமைச்சர் தலைமையிலான அரசு எடுத்து வருகிறது.
அதுபோல கிராம நிர்வாகம் மற்றும் நில நிர்வாகம் தொடங்கி மாவட்ட நிர்வாகம் வரை கள நிர்வாகப்பணி களையும் பல்வேறு சமூக நலத்திட்டங்களையும் செயல் படுத்தும் மிக முக்கியத் துறையாக விளங்கும் வருவாய்த்துறையின் செயல் திறனை மேம்படுத்தும் வகையில் பல்வேறு ஆக்கப் பூர்வமான நடவடிக்கைகளை தமிழக முதலமைச்சரின் தலைமையிலான அரசு எடுத்து வருகிறது.
காணொலி காட்சி மூலம்
அதன் அடிப்படையில் தமிழகத் தின் பல்வேறு பகுதி களில் காவல் துறைக்கென்று 11 கோடியே 24லட்சத்து 30 ஆயிரம் மதிப்பில் கட்டப் பட்டுள்ள கட்டிடங்களையும், வருவாய்த்துறைக்கு ரூ.7.கோடியே 58லட்சம் மதிப்பிலான கட்டிடங் களையும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தலைமைச் செயலகத்தில் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
மேலும், தீயணைப்பு, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறைக்கென்று ரூ.13கோடியே 84லட்சம் மதிப்பிலான கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டி , ரூ.92கோடியே 45 லடசத்து 70ஆயிரம் மதிப்பிலான கட்டிடங்களை தமிழக முதலமைச்சர் திறந்து வைத்தார்.
பெரம்பலூர் மாவட்டம்
அதில் பெரம்பலூர் மாவட்டத்தில் மாவட்ட கலெக்டர் பெருந்திட்ட வளாகத்தில் ரூ.75லட்சம் மதிப்பில் இரண்டு துணை ஆட்சியர் குடியிருப்பு களை யும், செட்டிக்குளம் மற்றும் பசும்பலூர் ஆகிய பகுதிகளில் தலா ரூ.10லட்சம் வீதம் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு வருவாய் ஆய்வாளர் குடியிருப்புகளையும், ரூ.48லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பெரம்பலூர் நகர காவல் நிலையத்தையும், ரூ.38லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மங்களமேடு காவல் நிலையத்தையும், ஆக மொத்தம் ரூ.1கோடியே 81லட்சம் மதிப்பில் கட்டப் பட்டுள்ள புதிய கட்டிடங்களை தமிழக முதலமைச்சர் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
இனிப்பு வழங்கினார்
தமிழக முதலமைச்சர் கட்டிடங்களை திறந்து வைத்ததை தொடர்ந்து பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் பெருந்திட்ட வளாகத்தில் கட்டப்பட்டுள்ள துணை ஆட்சியர் குடி யிருப்பில் மாவட்ட கலெக்டர் தரேஸ் அஹமது, அனை வருக்கும் இனிப்புகளை வழங்கினார்.
கலந்து கொண்டவர்கள்
இந்நிகழ்ச்சியில் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் இளம்பை இரா.தமிழ்ச்¢ செல்வன் , மாவட்ட வருவாய் அலுவலர்சுப்பிரமணியன், , மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் சகுந்தலா கோவிந் தன், நகர்மன்றத் தலைவர் ரமேஷ்ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர்கள் மருதராஜா (பெரம்பலூர்), கிருஷ்ண குமார்(வேப்பூர்), ஜெய லெட்சுமிகனகராஜ் (வேப் பந்தட்டை).வெண்ணிலா ராஜா (ஆலத்தூர்), மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) மலையாளம், வருவாய் கோட்டாட்சியர் புஷ்ப மாரியம்மாள், பொதுப் பணித்துறை உதவி செயற் பொறியாளர்கள் முத்தையன், செந்தில்குமார், செல்வராஜ், பெரம்பலூர் வட்டாட்சியர் ரெங்கராஜ் மற்றும் வருவாய்த்துறை அலு வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1