.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

‘திஸ் இஸ் முஹம்மத்’ உலகின் மிகப் பெரிய புத்தகம் ஐக்கிய அரபு இராச்சியத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது

Unknown | 9:18 PM | 0 comments


.


கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்த 1500 கிலோ எடை கொண்ட முதலாவது மிகப்பெரிய அரபுமொழிப் த்தகமான  ‘திஸ் இஸ் முஹம்மத்’ தற்போது ராஸ் அல் கைமாவில் அமைந்துள்ள அல் ஹம்றா மோல் எனுமிடத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தப் புத்தகம் ஐந்து மீற்றர் நீளமும் எட்டு மீற்றர் அகலத்தையும் 429 பக்கங்களையும் கொண்டுள்ளது. இப் புத்தகம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வெற்றிகள் மற்றும் மனிதர்கள் மற்றும் அரசியல் தெடர்பில் அவர்கள் பெற்ற உடன்பாடான விளைவுகள் என்பவற்றை விபரிக்கும் அவர்களின் வாழ்க்கை வரலாறு தொடர்பில் பேசுகின்றது. இந்தப் புத்தகத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மீது கொண்ட அன்பை வெளிப்படுத்தும் பத்து இலட்சம் பேரின் கையொப்பங்களைப் பெறும் ஏற்பாடும் காணப்படுகின்றது.
இந்தப் புத்தகம் சவூதி எழுத்தாளரும் றியத்திலுள்ள இஸ்லாமிய பிக்ஹ் ஆராய்ச்சி நிலையத்தின் செயலாளர் நாயகமுமான அப்துல்லாஹ் அப்துல் அஸீஸ் அல் முஸ்லிஹ் அவர்களால் எழுதப்பட்டு மொஹமட் ஸயீட் அலவ்லாகி அவர்களினால் திருத்தியமைக்கப்பட்டுள்ளது.
 muhammed
இந்தத் திட்டம் ஐக்கிய அரபு இராச்சியத்தின் நிதியமைச்சரும் பிரதி ஆட்சியாளருமான ஷெய்க் ஹம்தான் பின் றஷீட் அல் மக்தூம் அவர்களின் பொறுப்பின் கீழுள்ள துபாயில் அமைந்துள்ள மஷாஹிட் சர்வதேச குழுமத்தினால் திரை நீக்கம் செய்யப்பட்டது.
சுமார் 11 மில்லியன் அரபு அமீரக திர்ஹம்கள் செலவிடப்பட்ட இப்புத்தகத்தை நிர்மாணிக்கும்; பணியில் 50 பேருக்கும் மேற்பட்டோர் பங்குபற்றினர்.
பிரெயிலி (பார்வையற்றோருக்கானது) மொழி உள்ளிட்ட நான்கு மொழிகளில் இதனை எழுதி சுமார் ஒரு மில்லியன் பிரதிகளை அச்சிடுவதற்கு பதினாறு மாதங்கள் தேவைப்பட்டதாகவும் இப்புத்தகம் இத்தாலி மற்றும் டெனிஷ் மொழிகளிலும் அச்சிடப்படவுள்ளதாகவும் மஷாஹிட் சர்வதேச குழுமம் தெரிவித்துள்ளது.
பெரும் எண்ணிக்கையிலான பார்வையாளர்கள் மிகப் பெரிய புத்தகத்திற்கு முன்னால் நின்று ஞாபகார்த்த புகைப்படங்களை எடுத்துக்கொள்கின்றனர் இந்தப் புத்தகம் இதற்கு முன்னதாக இப்ன் பட்டுடா மோல், அல் முஷ்ரிப் மோல், குளோபல் விலேஜ் மற்றும் அல் அரபி மத்திய நிலையம் ஆகியவற்றிலும் காட்சிப்படுத்தப்பட்டது. ஜூன் மாத இறுதி வரை அல் ஹம்றா மோலில் காட்சிப்படுத்தப்படும்.
இந்த அறிவார்ந்த செய்தியின் வெற்றிக்கும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உண்மையான முன்மாதிரியையும் ஆழமானதுமான கருத்துக்களையும் பிரதிபலிக்கச்செய்வதற்கும் இறைத் தூதரின் வகிபாகத்தின் முக்கியத்துவத்தை மக்களுக்கு அறிமுகம் செய்வதற்கும் எம்மால் முடியுமான அனைத்தையும் செய்வதற்கு தயாராக உள்ளோம் என அல் ஹம்றா மோலின் முகாமையாளரான விஸாம் அல்தோரா தெரிவித்தார்
  thanks :(arabnews)

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1