துபையில் புஷ்ரா நல அறக்கட்டளையின் ஜூன் மாதத்திர கூட்டம் சிறப்பாக நடைப்பெற்றது .
ஜூன் 15. துபாய் -தேரா அல் காமிஸ் உணவகத்தின் மாடியில் நேற்று [14-06-2013]
இரவு 7 :30 மணிக்கு புஷ்ரா நல அறக்கட்டளையின் ஜூன் மாதத்திர பொதுக்கூட்டம் சிறப்பாக நடைப்பெற்றது .
K.அப்துல் ஹக்கீம் தலைமையும் A. அப்துல் சலாம் மற்றும் A. ஷேக் தாவூத் முன்னிலையில் இந்த கூட்டம் நடைப்பெற்றது .
இதில் பெரும்பாலான உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர்கள் .
இந்த மாதம் புதிதாக 7 உறுப்பினர்கள் இந்த அறக்கட்டளையில்
இணைந்தனர்கள் .
2012-2013 ஆண்டு V.களத்தூர் அரசு மேல்நிலை பள்ளியில்
+2 மற்றும் பத்தாம் வகுப்பில் முதல் மூன்று இடம் பிடித்த
பள்ளி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க இக்கூட்டத்தில்
முடிவு அளிக்கப் பட்டது . மேலும் V.களத்தூர் கிளை
நிர்வாகி ,பள்ளி தலைமை ஆசிரியாரிடம் இது சம்மதமாக
பேசி ,பின் பள்ளியில் விழா நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது .
V.களத்தூர் சுற்று வட்டார கிராமங்களில் இந்த வருடம்
ரம்ழான் மாதம் கஞ்சி செய்ய அதிகம் பணம் தேவை உள்ளது. நமது ஊர் மக்களிடம் இது பற்றி சொல்லி ,
கூடுதல் பணம் அனுப்ப இக்கூட்டம் முடிவு செய்யப்பட்டது .
மேலும் இத்திட்டத்திற்கு தலைவராக A.அப்துல் சாலமும் ,
நமது ஊர் மக்கள் கஞ்சிக்காக பணம் செலுத்த விரும்பினால்
A .அப்துல் சாலம் -055 1153584.
என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும் .
புஸ்ரா முதலீட்டு திட்டத்தில் கிடைத்த லாபத்தை
புஷ்ரா முதலீட்டு திட்டத்தில் உள்ள உறுப்பினருக்கு லாபத்தை பிரித்து கொடுக்கப்பட்டது .மேலும் இத்திட்டத்தில்
இணைய உறுபினருக்கு அழைப்பு கொடுக்கப்பட்டது .
நமது ஊரில் வட்டி இல்லாகடன் திட்டத்திற்கு புதிதாக இரண்டு
உறுப்பினர்கள் வைப்புத்தொகை ,செலுத்தினார்கள் .
அவர்களுக்கு ,வைப்புத் தொகை சான்றிதழ்கள்
வழங்க்கப் பட்டன .
இத்திட்டதில் நீங்கள் இணைய விரும்பினால்
F.அப்துல் ரஹ்மான் - 0558331070
என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும் .

Category: துபாய்















0 comments