.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

கலை, அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கு மாணவர்கள் ஆர்வம்-விண்ணப்பம் பெற கூட்டம் அலைமோதல்.

Unknown | 8:34 PM | 0 comments

.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் மே 9ம் தேதி வெளியிடப்பட்டது. இதைதொடர்ந்து 2013&14 கல்வி ஆண்டுக்கான பொறியி யல் மாணவர்கள் சேர்க்கைக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த 4ம் தேதி முதல் விண்ணப்பம் விநியோகிக்கப்பட்டது. மொத்தம் 2 லட்சத்து 35 ஆயிரம் விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்பட் டுள்ளது. அதேபோல, மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பமும் கடந்த 9 ம் தேதி முதல் வழங்கப்பட்டு மொத்தம் 32ஆயிரத்து 052 விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
அதேநேரம் கலை, அறிவியல் கல்லூரிகளும் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை கடந்த 6ம் தேதி முதல் வழங்கி வருகின்றன. விண்ணப்பங்கள் விற்பனை சூடுபிடித்துள்ளது.
கலை, அறிவியல் படிப்புகளை பொறுத்தவரை கணிதம், இயற்பியல், வேதியியல், நுண்உயிரியல், வணிகவியல், பிசிஏ, பிபிஏ, கம்ப்யூட்டர் சயின்ஸ், சோசியாலஜி, புவியியல், போலீஸ் நிர்வாகம், மன அறிவியல், உணவியல், உணவு அறிவியல், விஷுவல் கம்யூனிகேஷன், ஓட்டல் மேலாண்மை, பேஷன் டிசைனிங், சுற்றுலா மற்றும் போக்குவரத்து மேலா ண்மை, பத்திரிகை நிர்வா கம் போன்ற பிரிவுகளுக்கு அதிக மவுசு உள்ளது.
தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்& 62, அரசு உதவி பெறும் கல்லூரிகள்& 148, பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள்& 24, சுயநிதி கல்லூரிகள்& 424 என மொத்தம் 658 கல்லூரிகள் உள்ளன. இக்கல்லூரிகள் மூலம் ஆண்டுக்கு 3 லட்சத்து 35 ஆயிரத்து 418 மாணவ& மாணவிகள் கல்வி கற்கின்றனர்.
கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் அரசு விடுமுறை நாட்கள், சனி, ஞாயிற்றுக் கிழமை தவிர்த்து மற்ற நாட்களில் வழங்கப்படுகிறது.
குறைந்த கல்வி கட்டணம், மூன்றாண்டுகளில் இளநிலை படிப்பை முடித்து விடலாம், போட்டி தேர்வுகளில் அதிகளவில் பங்கேற்கலாம், உடனடி வேலைவாய்ப்பு போன்ற காரணங்களால் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர மாணவர்கள் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர்.
தமிழகத்தில் ஆண்டுதோறும் 1.30 லட்சத்துக்கு மேற்பட்ட பொறியாளர்கள் படித்து முடிக்கின்றனர். அவர்களில் 90 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெறுபவர்களுக்கு மட்டுமே பெரிய நிறுவனங்களில் நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கிறது. மற்றவர்கள் வேலைக்காக போராட வேண்டியுள்ளது. இந்நிலையில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் குறைந்த செலவில் படித்து முடித்ததும் உடனடியாக வேலை வாய்ப்பு உள்ளதும் மாணவர்கள் ஆர்வத்துக்கு காரணம் என்று கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1