மலேசியா: ஆற்றில் படகு கவிழ பலர் பலி
28-5-2013 மலேசியாவின் போர்னியோ தீவில் ஆற்றில் பயணிகள் படகு ஒன்று கவிழ்ந்ததில் பலர் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டின் பொலிசார் கூறுகின்றனர்.
சரவக் பகுதியில் ரஜங் ஆற்றில் படகு கவிழ்ந்த நேரத்தில் நூற்றுக்கும் அதிகமான பயணிகள் அதில் இருந்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
நிறைய பேர் மீட்கப்பட்டுள்ளனர் என்று கூறிய இந்த வட்டாரத்தின் காவல்துறை தலைவர் பக்கர் செபாவு, சரியான எண்ணிக்கைகளை வழங்கவில்லை.
பெண்கள் குழந்தைகள் இந்தப் படகில் இருந்தனர் என்று அவர் குறிப்பிட்டார்.
இந்தப் படகில் ஏற்றுவதற்கு பரிந்துரைக்கப்பட்ட ஆட்களின் அதிகபட்ச எண்ணிக்கை 74 பேர்தான்.
பண்டிகை ஒன்றில் கலந்துகொண்டு திரும்பும் மக்களை ஏற்றிக்கொண்டு சோபு என்ற ஊரிலிருந்து புன்கான் என்ற ஊருக்கு வருகையில் பாறை ஒன்றில் மோதி இந்தப் படகு கவிழ்ந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
Category: உலக செய்தி


0 comments