.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

"மாணவர்கள் அனைவரும் உயர்கல்வி பெற வேண்டும் "கலெக்டர் தரேஸ் அகமது பேச்சு .

Unknown | 9:36 PM | 0 comments


பெரம்பலூர்,மே 18:
மாணவர்கள் அனைவரும் உயர்கல்வி பெற வேண்டும் என பெரம்பலூரில் நடந்த வழிபாட்டி பயிற்சி வகுப்பில் கலெக்டர் தரேஸ் அகமது பேசினார்.
பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மேல்நிலைக்கல்வியில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்வி குறித்த வழிகாட்டி நெறி முறைகள் தொடர்பான பயிற்சி வகுப்பு நடைபெற்றது. பயிற்சிக்கு பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் தரேஸ்அகமது தலைமை வகித்து பேசியதாவது: பெரம்பலூர் மாவட்டத்தில் 2013 மார்ச் மாதம் நடந்த பிளஸ் 2 பொதுத்தேர் வினை 7,839 மாணவ ,மாணவிகள் எழுதினர்.
இதில் 7,101 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் கிராமப்புறத்தில் அதிக மாணவ, மாணவிகள் உள்ளதால், அவர்களுக்கு உயர் கல்வி றறறயில் என்ன படிக்கலாம் என்பதை தெரிந்துகொள்ள அதிகவாய்ப்பு இல்லாத நிலையுள்ளது. பெற்றோருக்கும் இதுகுறித்த விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் மாணவ, மாணவிகள் 12ம் வகுப்பு படித்தப்பிறகு உடனேயே திருமணம் செய்துவைக்கும் நிலையுள்ளது. இல்லாவிட்டால் பெரம்பலூர் போன்ற நகரங்களில் சாதாரணமாக கடைகளில் வேலைபார்க்கும் நிலை உள்ளது. இந்த நிலையை மாற்றியமைத்திட, பெற்றோர்களுக்கும், மாணவ, மாணவிகளுக்கும் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், உயர்கல்வி வசதிக்காக இயங்கிவரும் கல்வி நிறுவனங்களைப் பற்றி அறிந்துகொள்ளவும் இந்தப் பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது. மேல்நிலைக் கல்வி முடித்த மாணவ,மாணவிகள் உயர்கல்வியில் என்ன படிக்கலாம் என்பதை ஆராய்ந்து பார்த்து தேர்வு செய்ய வேண்டும். மாணவ, மாணவிகளின் எதிர்காலம் உயர் கல்வியை மட்டுமே அடிப்படையாகக் கொண்டுள்ளதால் அனைவரும் கட்டாயம் உயர் கல்வி பயில வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
பயிற்சி முகாமில் ராமகிருஷ்ணா கல்விநிறுவனங்களின் தாளாளர் சிவசுப்ரமணியன், ரோவர் மேலாண்மைக் கல்லூரி இயக்குநர் சாமிநாதன், ரோவர் கலைஅறிவியல் கல்லூரி துணைமுதல்வர் ரவி, டீன் சேவியர் அமல தாஸ், தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கல்லூரி முதல்வர் அப்ரோஸ், இருபாலர் கலை அறிவியல் கல்லூரி முதல்வர் வடிவழகன், தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரி முதல்வர்கள் நடராஜன், இளங்கோ, மீனாட்சி ராமசாமி, பொறியியல் கல்லூரி பேராசிரியர்கள் மருது, பாரதிராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1