.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

துபாய் துறைமுகத்தில் 259 யானை தந்தங்கள் பறிமுதல்...

Unknown | 2:04 PM | 0 comments

துபாய் துறைமுகத்தில் 259 யானை தந்தங்கள் பறிமுதல்..
துபாய், மே 22- 

கள்ளத் தனமாக கடத்தப்பட்ட 259 யானை தந்தங்களை துபாய் துறைமுக சுங்கத் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். 

ஆப்பிரிக்க நாட்டில் இருந்து 'மரச் சாமான்கள்' என குறிப்பிடப்பட்ட கண்டெய்னர் ஒன்று துபாயில் உள்ள ஜெபெல் அலி துறைமுகத்திற்கு கப்பலில் வந்தது. 

அந்த கண்டெய்னரில் இருந்த பெட்டிகளை சுங்கத் துறையினர் சந்தேகத்தின் பேரில் சோதனை செய்தனர். பெட்டிகளின் உள்ளே ஆப்பிரிக்க நாட்டின் அரியவகை யானை தந்தங்கள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. 

மொத்தம் 259 தந்தங்களை கைப்பற்றிய சுங்க அதிகாரிகள், இவற்றை அனுப்பிவைத்த ஆப்பிரிக்க ஏஜென்டை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். 

1990-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சர்வதேச யானை தந்தம் கடத்தல் (தடுப்பு) ஒப்பந்தத்தில் துபாய் அரசு கையொப்பமிட்டுள்ளது.  துபாயின் உள்நாட்டு சட்டவிதி 11-ன் கீழ் யானை தந்தம் கடத்தல் மிகப் பெரிய குற்றமாக கருதப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1