.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

இனி ஏர் இந்தியா விமானத்தில் 15 கிலோவுக்கு மேலான லக்கேஜுக்கு கட்டணம்

Unknown | 7:35 AM | 0 comments


டெல்லி: ஏர் இந்தியா விமானத்தில் 20 கிலோ எடை வரை உள்ள பொருட்களை இலவசமாக எடுத்துச் செல்லலாம். ஆனால் அடுத்த வாரம் முதல் 15 கிலோ எடையுள்ள பொருட்களை மட்டுமே கட்டணம் செலுத்தாமல் எடுத்துச் செல்ல முடியும்.
ஏர் இந்தியா நிறுவனத்தின் வருமானத்தை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. உள்நாட்டு சேவை விமானத்தில் விருப்பப்படும் சீட்டை பெற கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும், சாப்பாட்டிற்கு பணம் கட்ட வேண்டும் என்பன உள்ளிட்ட புதிய கட்டண விதிமுறைகள் அமலுக்கு வரவிருக்கின்றன.
ஏர் இந்தியா விமானத்தில் செல்பவர்கள் 20 கிலோ எடையுள்ள பொருட்களை இலவசமாக கொண்டு செல்லலாம். ஆனால் அடுத்த வாரம் முதல் 15 கிலோ எடையுள்ள பொருட்களை மட்டுமே இலவசமாக கொண்டு செல்லலாம். அதற்கு மேல் எடையுள்ள பொருட்களை கொண்டு செல்ல கிலோ ஒன்றுக்கு ரூ. 200 முதல் 250 கட்டணம் செலுத்த வேண்டும். தற்போது 20 கிலோவுக்கும் மேற்பட்ட எடையுள்ள பொருட்களை எடுத்துச் செல்ல கிலோவுக்கு ரூ.150-400 வசூலிக்கப்படுகிறது.
இந்த புதிய விதிமுறை உள்நாட்டு சேவைகளுக்கு மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1