![]() |
FILE |
பெரம்பலூர்,: பெரம்பலூர் அருகே, இரு பிரிவினருக்கிடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து, பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.பெரம்பலூர் அருகே உள்ள மேலப்புலியூர் கிராமத்தில், தீபாவளி அன்று, சிலர், தெருவில் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, பக்கத்து தெருவை சேர்ந்தவர்கள், இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து, இரு பிரிவினருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு, ஒருவரை ஒருவர் கல்வீசி தாக்கிக் கொண்டுள்ளனர்.
இது குறித்து ரெங்கராஜ், 45 என்பவர் கொடுத்தப் புகார்படி, மற்றொரு பிரிவை சேர்ந்த, ஐந்து பேர் மீது பெரம்பலூர் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.இந்நிலையில், இரு பிரிவினரும், நேற்று பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். கலெக்டர் ஆய்வுக்கு சென்றதால், டி.ஆர்.ஓ., ராஜன்துரையிடம் மனு கொடுத்தனர். அவர், ""தாசில்தாரிடம் கொண்டு போய் கொடுங்கள், அவர் பேச்சுவார்த்தை நடத்துவார்,'' என கூறினார். அதனால், அவர்கள் மனுவோடு திரும்பிச் சென்றனர்.

+2,டிப்ளமா படித்து இரண்டாண்டு அனுபவம் உள்ளவர்கள் தங்கள் துறை சார்ந்த வேலைக்கு முயற்சிக்கலாம். அவர்கள் குறைந்தது 40,000 முதல் அதிகபட்சம் 70,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.
ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்து மூன்று ஆண்டுகள் தொழில் அனுபவம் உள்ளவர்களுக்கு நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும். வங்கி சேவைகள், தகவல் தொழில் நுட்பம், விற்பனை பிரதிநிதிகள், ஃபார்மா, பொறியியல் வல்லுநர்கள் போன்றோருக்கு குறைந்தபட்ச சம்பளமே 1,00,000 ரூபாயில் ஆரம்பிக்கும்.
இளமையும், வேகமும்,சம்பாதிக்க துடிக்கும் வேட்கையும்,சர்வதேச தரத்திலான அனுபவம் வேண்டுபவர்களும் இங்கு வேலைக்கு வரலாம்.உங்கள் சம்பளத்தில் 60%-70% பணத்தை ஊருக்கு அனுப்ப முடியும்.உங்கள் சம்பாத்தியத்தில் பத்து பைசா கூட இந்நாடு வரியாக கேட்காது. (இங்கு பொழுதுபோக்கு அம்சங்களும்,காசை செலவு செய்வதற்கான விடயங்களும் ஏராளம் உண்டு. மனக்கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டியது உங்கள் பொறுப்பு)
வேலை கிடைப்பதற்காக ஏஜென்ட்டுகளிடம் பணத்தை கொடுத்து ஏமாற வேண்டாம்.இங்கு பெரிய நிறுவனங்கள் யாரும் ஏஜென்ட்டுகள் மூலம் ஆள் எடுப்பதில்லை என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.இங்கு வேலைவாய்ப்பு இணையதளங்கள் நிறைய உண்டு,அதில் உங்கள் ‘Resume’மை அப்லோட் செய்து நீங்கள் தேடும் வேலை வரும்போது
விண்ணப்பியுங்கள்.நேர்முகத்தேர்வு பெரும்பாலும் தொலைபேசி /வெப்கேம் மூலம் முடிந்துவிடும். இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கும்போது யாரேனும் பணம் அனுப்ப சொன்னால் அனுப்ப வேண்டாம்.
இங்கு கட்டிட வேலைக்கோ,துப்புரவு பணிக்கோ யாரேனும் வருவதாக கிளம்பினால் அவர்களிடம் எடுத்து சொல்லி நம்நாட்டிலேயே பணிபுரிய சொல்லுங்கள்.அந்த வேலைக்கு இங்கு பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை,ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து தொழிலாளர்கள் வருகிறார்கள்.
ரிஸ்க் எடுக்க விரும்புகிறவர்கள் 60 நாள் விசிட் விசாவில் வந்து நேர்முகத்தேர்வுகளில் கலந்து கொள்ளலாம். வெற்றி வாய்ப்பு 50% மட்டுமே.(செலவு 1,00,000 வரை ஆகும்)
வேலைவாய்ப்பு குறித்த தகவல்களை நான் அவ்வப்போது பதிவு செய்கிறேன்.தேவையுள்ளோர்கள் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.(அதற்கு சேவை கட்டணம் உங்களின் அன்பு மட்டுமே )
நான் பணிபுரியும் வங்கியில் (Govt Bank) ஜனவரி மாதத்தில் 340 பணியிடங்களுக்கு (Operation /Sales /Technical) ஆட்கள் வேலைக்கு எடுக்கப்பட இருக்கிறார்கள்.(குறைந்தபட்ச சம்பளம் 1,30,000).மேற்கண்ட துறைகளில் மூன்றாண்டுகள் அனுபவம் உள்ளவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம் (One of the World’s 50 Safest Bank)
நவம்பர்-ஏப்ரல் வரை இங்கு நல்ல காலநிலை நிலவும்.சுற்றுலா வருவதற்கு ஏற்ற நேரம். சுற்றுலா வாங்க !
பி.கு: துபாய் அரபு நாடு என்பதால் சவுதிக்கு நிகராக கடுமையாக இருக்கும் என பலரும் குழப்பிக்கொள்கிறார்கள்.ஆனால் அப்படி இல்லை.ஐரோப்பிய கலாச்சாரத்தில் இருக்கும் ஒரு அரபு தேசம் துபாய். யூ டியூபிலும்,கூகுள் இமேஜிலும் துபாய் குறித்து பார்த்துவிட்டு இங்கு சுற்றுலாவுக்கோ /வேலைக்கோ வாங்க !
நம்பிக்கை ராஜ்

சிட்னி: இதய துடிப்பு நின்று போன இதயத்தை, மற்றொருவருக்கு பொருத்தி அதை இயங்கவைத்து ஆஸ்திரேலிய டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர். உலகில் முதல் முறையாக இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. இதய மாற்று அறுவை சிகிச்சையில் வழக்கமாக மூளை சாவு அடைந்தவரின் துடிக்கும் இதயத்தை எடுத்து, அதை ஐஸ் பெட்டியில் 4 மணி நேரம் வரை பாதுகாத்துதான் மற்றொருவருக்கு பொருத்துவர். இறந்தவரின் இதயம் இதுவரை பயன்படுத்தப்பட்டது இல்லை. ஆனால், ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள செயின்ட் வின்சென்ட் மருத்துவமனையில் இதய நோயாளிகள் 3 பேருக்கு, தானமாக பெறப்பட்ட இறந்தவர்களின் இதயத்தை பொருத்தி அதை செயல்பட வைத்து சாதனை படைத்துள்ளனர்.
இந்த இதயங்கள் அனைத்தும் துடிப்பை நிறுத்தி 20 நிமிடங்கள் ஆனவை என்பது குறிப்பிடத்தக்கது. முதல் இதயம் மிசேல் கிரிபிலாஸ் என்ற பெண்ணுக்கு பொருத்தப்பட்டது. 57 வயதான அவர் தற்போது நலமுடன் உள்ளார். தான் 40 வயதுடையவர் போல் வயது குறைந்து இளமையாகிவிட்டது போல் உணர்கிறேன் என அந்தப் பெண் தெரிவித்துள்ளார். இதேபோல் மேலும் 2 பேருக்கு இதயமாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்த அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்த டாக்டர் குமுத் திதால் கூறுகையில், ‘‘இறந்த இதயத்தில் காற்றை செலுத்தியுள்ளேன்.
நவீன தொழில்நுட்பம்தான் இதற்கு காரணம். இதயத்தை பாதுகாக்கும் திரவத்தில் வியக்கத்தக்க வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இது இதயத்தை சூடாக பாதுகாத்து மீண்டு செயல்பட வைத்துள்ளது. நவீன தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட ‘‘ஹார்ட் இன் ஏ பாக்ஸ்’’ என்ற இயந்திரத்தில் வைத்து இறந்த இதயம் பாதுகாப்பாக எடுத்து வரப்படுகிறது. இதய மாற்று அறுவை சிகிச்சையில் ஏற்பட்டுள்ள இந்த முன்னேற்றம், உலகம் முழுவதும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த முறை மூலம் இனி இதயங்களை அதிகளவில் தானமாக பெற முடியும். இதன் மூலம் மேலும் 30 சதவீத இதயமாற்று அறுவை சிகிச்சை நோயாளிகளை காப்பாற்ற முடியும்.
* இதய மாற்று அறுவை சிகிச்சையில் உலகில் புதிய அத்தியாயம் துவக்கம்.
* இறந்தவரின் இதயத்தை இதய நோயாளிக்கு பொருத்தி புதிய சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.
* இந்த சாதனையை சிட்னியில் உள்ள செயின்ட் வின்சென்ட் மருத்துவமனை டாக்டர்கள் குழு நிகழ்த்தியுள்ளது.
* டாக்டர்கள் குழுவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த டாக்டர் ஒருவரும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
* இதுவரையில் 3 பேருக்கு இறந்தவரின் இதயத்தை பொறுத்தும் இதயமாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டுள்ளது.
* செயின்ட் வின்சென்ட் இதய மாற்று அறுவை சிகிச்சை பிரிவின் தலைவர் பேராசிரியர் பீட்டர் டொனால்டு கூறுகையில், “இந்த புதிய முயற்சி, இதய மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்கு வரப்பிரசாதமாக அமையும்Ó என்று நம்பிக்கை தெரிவித்தார்.
* மருத்துவத்தில் புதிய முன்னேற்றம் என்று பிரிட்டிஷ் ஹார்ட் பவுன்டேஷன் பாராட்டியுள்ளது.
உடல் சக்தி பெற:
இரவு உணவாக வாழைப்பழம் 2, தேங்காய் 1மூடி சாப்பிட்டு வர உடல் சக்தி பெறும்.
வெட்டுக்காயம் குணமாக:
நாயுருவி இலையுடன் சிறிது மஞ்சள் சேர்த்து அரைத்து, வெட்டுக் காயத்தின் மீது பூசிவர விரைவில் ஆறிவிடும்.
உடல் அரிப்பு குணம் பெற:
வன்னி மரத்தின் இலையை பசும்பால் விட்டு நன்கு அரைத்து, தினசரி 1 அவுன்ஸ் சாப்பிட்டு வந்தால் உடல் அரிப்பு படிப்படியாக நீங்கும்.
காதில் சீழ்வடிதல் குணமாக:
வெற்றிலையை நறுக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி, சிவந்தவுடன் இறக்கி ஆறவைத்து சீசாவில் பத்திரப்படுத்தவும். இதை காலை, மாலை இரண்டு சொட்டு காதில் விட்டு வர காதில் சீழ்வடிதல் நின்று விடும்.
இரத்த சோகையை போக்க:
பீர்க்கங்காய் மற்றும் அதன் கொடியின் வேரை தினமும் சாப்பிட்டு வந்தால் இரத்த சோகை நீங்கும்.
கட்டிகள் உடைய
மஞ்சள், சுண்ணாம்பு, விளக்கெண்ணெய் மூன்றையும் நன்றாக குலைத்து கட்டிகள் உள்ள இடத்தில் பற்று போட்டால் கட்டிகள் சீக்கிரம் பழுத்து உடைந்து விடும்.
பேன் தொல்லை நீங்க
வசம்பு, வேப்பிலை இரண்டையும் அரைத்து தலையில் தேய்த்து 30 நிமிடங்கள் கழித்து குளித்து வந்தால் தலையில் உள்ள பேன் நீங்கும்.
மேனி பளபளப்பு பெற
ஆரஞ்சுப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மேனி பளபளப்பு பெறும்.
தும்மல் வராமல் இருக்க
தூதுவளை பொடியில் மிளகு பொடி கலந்து தேனில் (அ) பாலில் சாப்பிட்டால் தும்மல் வராது.
கரும்புள்ளி மறைய
எலுமிச்சை சாறு மற்றும் கிளிசரின் கலந்து கரும்புள்ளிகள் மீது தடவிவர, அவை நாளடைவில் மறைந்து விடும்.
தொண்டை கரகரப்பு நீங்க
அதிமதுரத் துண்டு ஒன்றை வாயில் அடக்கிக் கொண்டிருந்தால் வாயில் உமிழ் நீர் சுரக்கும். இந்த உமிழ்நீரை உள்ளுக்கு விழுங்கிக் கொண்டிருந்தால் தொண்டைக் கரகரப்பு நீங்கும். குரல் கம்மல் நீங்கி விடும். தொண்டையில் உள்ள சளிக்கட்டு கரைந்து விடும்.
கருத்தரிக்க உதவும்
அதிமதுரம், திராட்சை இவை இரண்டையும் சமமாகப் பொடி செய்து 50 - 100 கிராம் எடுத்து தண்ணீரில் அரைத்து பாலில் கலக்கி பெண்களின் மாதவிடாய் தொடங்கிய நாள் முதல் ஐந்து தினங்கள் சாப்பிட்டு வந்தால், ஆரோக்கியமான பெண்களுக்குக் கருத்தரிக்கும். கருத்தரிக்கும் வரை 2-3 மாதங்கள் சாப்பிட்டால் நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.
இருமல் சளி குணமாக
சித்தரைத்தையும் பனங்கற்கண்டு இரண்டையும் சம அளவு எடுது கஷாயம் வைத்து மூன்று வேளைக்கு தொடர்ந்து மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால் வரட்டு இருமல் சளி குணமாகும்
குன்னம் அருகே அடிப் படை வசதிகள் செய்து தரக்கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அடிப்படை வசதிகள்
பெரம்பலூர் மாவட்டம் வயலப்பாடி ஊராட்சி குன்னம் அருகே வீரமாநல் லூர் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்திற்கு கடந்த 10 ஆண்டுகளாக எந்தவித அரசு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படவில்லை. அடிப் படை வசதிகளான குடிநீர் வசதி, சாலை வசதி, மின் வசதி, பஸ் வசதி ஆகியவை செய்து தரப்படவில்லை என கூறப்படுகிறது.
மேலும் தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக சாக்கடை நீர் ரோட்டில் தேங்கி நிற்பதாகவும், இத னால் கொசு தொல்லை ஏற்படுவதாகவும், நோய் ஏற்படும் அபாயம் உள்ளது எனவும் இந்த கிராம மக்கள் கூறி வந்தனர்.
சாலை மறியல்
இந்த நிலையில் அடிப் படை வசதிகள் செய்து தர கோரி 50 பெண்கள் உள்பட 150 பேர் குன்னம் அருகே அரியலூர்–திட்டக்குடி சாலை வயலப்பாடியில் மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப் பட்டது.
பேச்சுவார்த்தை
இதுபற்றி தகவல் அறிந்த குன்னம் தாசில்தார் மணி வேலன், வேப்பூர் வட்டார வளர்ச்சி அதிகாரி தமிழரசி மற்றும் குன்னம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்ட
வர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். கிராம மக்களின் கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும் என அதிகாரிகள் உறுதி அளித் ததை தொடர்ந்து சாலை மறியலை கிராம மக்கள் கைவிட்டனர்.

‘கேம்பஸ் இண்டர்வியூ’ பலியாடுகளாகும் மாணவர்கள்! – அதிர வைக்கும் உண்மைகள் – பதறவைக்கும் தகவல்கள்
கேம்பஸ் இண்டர்வியூ’ – இன்றைய நிலையில்
மாணவர்கள் ஒரு
“ஆர்டரை மட்டும் வைத்துக்கொண் டு ஆண்டுக் கணக்கில் காத்திருக்கி றோம். இதனால் வேறு வேலைக்கு ம் செல்ல முடியவில்லை. எங்களு க்கு ஒரு வழி சொல்லுங்கள்’’ என்ற அவர்களின் கோபம் மிக நியாயமா னது. இது அவர்களின் குரல் மட்டும ல்ல… ஒவ்வொரு ஆண்டும் கேம்பஸ் மூலம் தேர்வாகி காத்திருக்கு ம் பல்லாயிரக் கணக்கான மாணவர்களின் குரலும் கூட. கேம்
“பொதுவாகப் பார்த்தால் கேம்பஸ் இண்டர்வியூ என்பது மாணவர்க
கல்லூரிகளை பொருத்தவரை ‘கேம்பஸ் இண்டர்வியூ’ என்பது
இப்போதைய பிரச்னை எதனால் உருவாகிறது? கேம்பஸ் மூலம்
இந்த டோட்-2 கல்லூரிகளில் தேர்வா கும் மாணவர்களுக்குதான் தற்போது பிரச்னை வருகிறது. நாடு முழுவதும் கேம்பஸில் தேர்வாகி வேலை தரா மல் இழுத்தடிக்கப்படுவதில் டோட்-2 கல்லூரி மாணவர்கள்தான் அதிகம். இவர்கள் யார் என்று பார்த்தா ல், பெரும்பாலும் கீழ்நடுத்தர வர்க்கத்தைசேர்ந்த, கிராமப்புற
ஐ.டி. நிறுவனங்களை பொருத்தவரை ஊழியர் எண்ணிக்கையும் அ
ஹெ.சி.எல். நிறுவனத்தில் மட்டும் 2013 -ம் ஆண்டின் நிலவரப்படி இந்தியா முழுவ தும் 6,000 பேர் கேம்பஸில் தேர்வாகி வே லை கிடைக்காமல் உள்ளனர். இவர்கள் ஃபேஸ்புக்கில் எதேச்சையாக ஒருவருக்கு ஒருவர் அறிமுகமாகி ஒரு ரகசிய குழுமம் ஒன்றை உருவாக்கி ஒருங்கிணைந்துள் ளனர். அதன் வழியேதான் சென்னை, பெங்களூரு உள்ளிட்ட இடங்க ளில் போராட்டம் நடத்தியுள்ளனர். இதேபோல இதர நிறுவனங்க
நாளை வேறு நிறுவனங்களுக்கு வேலைக்குப் போனால் ‘நீங்க ஃப் ரெஷ்ஷரா? அல்லது எக்ஸ்பீரியன் ஸ் இருக்கிறதா’ என கேட்பார்கள். ஃப்ரெஷ்ஷர் என்றால் பிரச்சனை இல்லை, வேலையில் சேர்ந்து விடலாம். ‘வெட்டியாக வேலைக்கா ககாத்திருந்தோம்’ என்றுசொன்னால் எந்த நிறுவனத்திலும் உடனே வேலை தர மறுப்பார்கள். அப்படியே வேலை கொடுத்தாலும்

இதில்கல்லூரியின் பொறுப்பு என்ன?
கேம்பஸ்மூலம் தேர்வான மாணவர்களுக்கு வேலைகிடைக்கவில் லை என்றால் அது கல்லூரியின் நற்பெயருக்கு களங்கம்
10 ஆயிரம் ரூபாய்க்கு வாஷிங்மெஷின் விற்பவன் கூட ஒரு வருடத்
இந்த நிலைமை குறித்து மாணவர்கள் வெளிப்படையாக பேசவும் முடியாது. அப் படி பேசினால் பிறகு எந்த நிறுவனத்திலு ம் வேலை கிடைக்காது. ஒரு ஐ.டி. முத லாளிக்கு பிரச்னை என்றால் மற்றவர்க ள் ஒன்று கூடிக் கொள்வார்கள். அவர்க ளுக்கு என ‘நாஸ்காம்’ சங்கம் இருக்கிற து. மாணவர்களுக்கு இத்தகைய அமைப்புகள் எதுவும் இல்லை.
“இதுதான் ஐ.டி. துறையின் உண்மையான பிரச்னை. பொதுவாக
இந்த ‘கேம்பஸ் இண்டர்வியூ’ என்பதன் உண் மை அபாயத்தை வேறொரு கோணத்தில் இ ருந்தும் புரிந்துகொள்ள வேண்டும். கல்லூரி ப் படிப்பு என்பது வெறுமனே வேலைக்கு ஆட் களை தயார்செய்யும் பட்டறைஅல்ல. அது சுயமாக சிந்திக்கவும், சமூகத்தை சொந்த அறிவுடன் அணுகவும் கற்றுத்தரும் இடம். உலகம் முழுவதும் மாணவர்கள் அரசியல் அறிவு பெறும் இடம் கல்லூரிதான். இந்த கே ம்பஸ் இண்டர்வியூ என்பதோ, மாணவர்களி டம் இருந்து சமூக உணர்வை துண்டிக்கிறது. மண்டை முழுக்க ‘கேம்பஸ் இண்டர்வியூ’வில் வேலை பெறுவது
இப்பிரச்னையில் மிக முக்கியமானது கல்விக்கடன். இலவச

‘இதற்கு நிறுவனங்கள் என்ன செய்யு ம்?
அவர்களுக்கு எதிர்பார்த்ததுபோல ஆர்டர்கிடைத்திருந்தால் வேலைக் கு எடுத்திருப்பார்கள்.
சென்னை: ஆவின் பால் விலையை லிட்டருக்கு ரூ. 10 உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ளார். பால் கொள்முதல் விலையை உயர்த்தி தருமாறு பால் உற்பத்தியாளர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்ததை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார். பசு தீவனம், இடு பொருட்கள் விலை கனிசமாக உயர்ந்துள்ளதை அடுத்து பால் கொள்முதல் விலை உயர்த்தப்படுவதாக பன்னீர் செல்வம் தெரிவித்தார்.

பசும்பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.5 உயர்ந்து ரூ.28-க்கும், எருமை பால் விலை லிட்டருக்கு ரூ.4 உயர்ந்து ரூ.35-க்கும், கொள்முதல் செய்யப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். கொள்முதல் விலை உயர்த்தபடுவதால் நுகர்வோருக்கு சமன்படுத்திய பால் அட்டை விற்பனை விலையும் உயர்த்தப்படுகிறது என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார். இதன்படி ஒரு லிட்டர் பால் விற்பனை விலை ரூ.24-ல் இருந்து ரூ.34- ஆக உயர்த்தப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
பெரம்பலூர், அக்.25:
பெரம்பலூரில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் பொதுமக்கள் பீதியடைந்து உள்ளனர்.
பெரம்பலூர் அருகேயுள்ள கவுல்பாளையம் கிராமத்தில் கடந்தஆண்டு ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் செங்கோடன், கந்தன், ரெங்கசாமி, முருகன், முரளி உள்ளிட் டோரின் 20க்கும்மேற்பட்ட ஆடுகள் மர்மமான முறையில் காணாமல் போனது. அருகிலுள்ள மலைப்பகுதியில் ஆடுமேய்த்துக் கொண்டிருந்த சிலர், மலைமேல் ஆட்டு எலும்புகள், மயில் இறக்கைகள் கிடப்பதாகத் தெரிவித்தனர். அதேபோல பலஇடங்களில் சிறுத்தையின் காலடித்தடம் இருந்ததைத் தொடர்ந்து கிராமத்தாரின் புகாரை ஏற்று வனத்துறையினரால் சோதனையிடப்பட்டது. பிறகு செப்டம்பர் 8ம்தேதி பொள்ளாச்சி வனஉயிரியல் காப்பகத்திலிருந்து சிறுத்தை, செந்நாய் உள்ளிட்ட விலங்குகளைப் பிடிக்கக்கூடிய கூண்டு வரவழைத்து பிடிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. எதிர்பார்த்தபடி 9ம்தேதி இரவு கூண்டிற்குள் சிக்கிய ஆண்சிறுத்தை 10ம்தேததி சத்தியமங்கலம் வனப்பகுதியில் கொண்டுபோய் விடப்பட் டது. இதனை அடுத்துதான் மக்களுக்கு மேலும் அச்சம் ஏற்பட்டது. பிறகு அந்தச் சிறுத்தை வேறு பல இடங்களில் நடமாடியபோது பதிவான காலடித்தடங்களைப் பார்த்த மக்கள் பெண்சிறுத்தை, 2குட்டி களோட இப்பகுதியில்தான் உள்ளது என கூறப்பட்டது.
எளம்பலூர் சாலையில் மாடுகளை கடித்துக் குதறியது, வடக்குமாதவி சாலையில் நாயை கடித்துகுதறியது என காயம்பட்டுக்கிடந்த கால்நடைகளை வைத்து பெரம் பலூரைச்சுற்றி சிறுத்தைகள் உள்ளதாக பலவாரங்கள் பீதியாகவே பொதுமக்கள் காணப்பட்டனர். இதனால் வனத்துறையினரும் உறக்கத்தை தொலைத்து ஊர்ஊராகத் சிறுத்தைகள் உள்ளதா? என தேடியலைந்தனர். ஜனவரி மாதம்வரை இருந்த சிறுத்தை பீதி பிறகுஇல்லாமல் போனது.
இந்நிலையில் நேற்று பெரம்பலூர் துறைமங்கலம் நகராட்சி 8வது வார்டு, விவேகானந்தர், பள்ளிவாசல் பகுதியில் சிறுத்தையின் காலடித்தடம் இருப்பதாக வெளியான தகவலால் மீண்டும் பொது மக்கள் மத்தியில் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டுள்ளது. விவேகானந்தர் நகரில் ரத்தினம் என்பருக்கு சொந்தமான பைக்கை வெளியே நிறுத்தியிருந்தார். வண்டியின் ஷீட்டை ஒரு மர்ம விலங்கு கடித்து குதறியது தெரியவந்தது. மேலும் சுற்றுப்புற பகுதிகளில் சுற்றித்திரிந்த மற்றும் வீட்டில் வளர்த்து வந்த நாய்களை கடந்த சில தினங்களாக காணவில்லை. இதையெல்லாம் வைத்து பார்க்கும்போது சிறுத்தையின் நாசவேலையாகத்தான் இருக்குமோ என்று பொதுமக்கள் மத்தியில் ஒருவித பீதியை கிளப்பியுள்ளது.
இதுகுறித்து தகவலறிந்த வனகாவலர்கள் ரவீந்திரன், தர்மராஜ் விவேகானந்தர் நகருக்கு பகுதிக்குச்சென்று பதிந்துள்ள காலடித்தடங்கள் சிறுத்தையின் காலடித் தடங்களா? எனப்பார்வையிட்டு, செல்போன் கேமராக்களில் அவற்றைப் பதி வும் செய்துகொண்டனர். அவற்றை ஏற்கனவே பதிவுசெய்துள்ள சிறுத்தையின் காலடித் தட மாதிரிகளோடு ஒப்பிட்டுப்பார்த்து உறுதிசெய்வதாகத் தெரிவித்துச் சென்றனர். மேலும் இரவுநேரங்களில் தனியாக வீதிகளில் நடமாடவேண்டாம், மர்ம வில ங்குக ளைக்கண்டால் வனத் துறையினருக்கு உடனே தெரிவிக்க வேண்டும் எனக்கூறிவிட்டுச் சென்றனர்.
இதனால் ஓராண்டுக்குப்பிறகு பெரம்பலூரில் சிறுத்தை குறித்து பீதி ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அமீருல் முஃமினீன் அவர்களே.., உங்களிடமிருந்து தொடர்ந்து எங்களுக்குக் கட்டளைகள் வந்து கொண்டே இருக்கின்றன, ஆனால் அந்த உத்தரவுக் கடிதங்களில் தேதிகள் குறிப்பிடப்படவில்லை, சிலவேளைகளில் கடிதத்தில் உள்ள வாசகங்கள் ஒன்றுக்கு ஒன்று முரண்படுகின்றன, எனவே அவற்றில் எது முந்தையது, எது பிந்தையது என்ற குழப்பம் நீடிக்கின்றது, உங்களது உத்தரவுகளை சரிவரப் புரிந்து கொள்ள இயலவில்லை என்று பஸராவின் கவர்னராக இருந்த அபூ மூஸா அல் அஷ்அரி (ரலி) அவர்கள் ஒரு கடிதத்தை உமர் (ரலி)அவர்களுக்கு எழுதினார்கள்.
பஸராவின் கவர்னரது சந்தேகம் உமர் (ரலி) அவர்களைச் சிந்திக்க வைத்தது. அதேநேரத்தில் யமன் தேசத்திலிருந்து ஷஃபான் மாதம் குறிப்பிடப்பட்டதொரு பணம் வந்திருந்தது. சரி.., அப்படி என்றால் இனி கடிதங்களில் மாதத்தைக் குறிப்பிடலாம் என்றால்.., அது இந்த வருடத்தில் உள்ளதா.., அல்லது அடுத்த வருடத்தியதா என்ற சந்தேகத்தையும் உருவாக்கி விடுமே என்று சிந்தித்தார்கள். உடனே, தோழர்களின் உதவியை நாடி இது குறித்து அவர்களிடம் ஆலோசனை நடத்தினார்கள்.
.
சிலர் ரோமர்களின் முறையையும், இன்னும் சிலர் பாரசீக முறைப்படியும் காலண்டர் உருவாக்கிக் கொள்ளலாம் என்றார்கள். ஆனால் உமர் (ரலி) அவர்களோ., நாம் முஸ்லிம்கள்.., முஸ்லிம்களுக்கென்று ஒரு நாட்காட்டி வேண்டும் என்றார்கள். சரி.., நம்முடைய தசாப்தம் எப்பொழுதிலிருந்து துவங்குகின்றது? என்று கூறுங்கள் என்றார்கள் உமர் (ரலி) அவர்கள்.
.
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பிறந்த தினத்திலிருந்து என்று ஒருசிலர் கூறினார்கள். இன்னும் சிலர் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மரண நாளிலிருந்து என்றார்கள். அப்பொழுது அலி (ரலி) அவர்கள் கூறினார்கள், முஸ்லிம்களினுடைய மறுமலர்ச்சி என்பது மக்காவிலிருந்து மதீனாவிற்கு ஹிஜ்ரத் புறப்பட்ட நாளிலிருந்து ஆரம்பமாகின்றது என்றார்கள், அலி (ரலி) அவர்களினுடைய இந்த ஆலோசனை ஏற்றுக் கொள்ளப்பட்டது.
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ரபிய்யுல் அவ்வல் மாதம் தனது ஹிஜ்ரத்தை ஆரம்பித்தார்கள். அவ்வாறென்றால் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் புறப்பட்ட பொழுது அந்த ஆண்டின் இரண்டு மாதங்களும் எட்டு நாட்களும் கடந்து விட்டிருந்தன. சரி.., ஹிஜ்ரியைக் கணக்கு வைத்து ஆண்டு என்றால், மாதங்களில் எந்த மாதத்தினை முதல் மாதமாகக் குறிப்பது என்ற குழப்பம் ஆரம்பமானது.
சிலர் ரஜப் மாத்திலிருந்து ஆரம்பமாக வேண்டும் என்றார்கள், சிலர் ரமளான் மாதம் புனிதமிக்கது, எனவே அதிலிருந்து ஆரம்பமாக வேண்டும் என்றார்கள், சிலர் ஹஜ் புனிதமிக்கது அதிலிருந்து தான் துவங்க வேண்டும் என்றார்கள்.
உஸ்மான் (ரலி) அவர்கள் கூறினார்கள்.., அரேபியாவில் புத்தாண்டு என்பது முஹர்ரம் மாதத்திலிருந்து தான் துவங்குகின்றது என்றார்கள். உஸ்மான் (ரலி) அவர்களது ஆலோசனை ஏற்றுக் கொள்ளப்பட்டது.
அன்றிலிருந்து புத்தாண்டின் முதல் மாதமாக முஹர்ரம் அறிவிக்கப்பட்டது. ஹிஜ்ரி காலண்டர் முறையும் உருவானது. பின்னர் இந்த முடிவு அனைத்துப் பிரதேசங்களுக்கும் அறிவிக்கப்பட்டது.
உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பல்வேறு நலத் திட்ட உதவிகள் பெறலாம் என்று பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
முதல்வரின் உழவர் பாதுகாப்புத் திட்டம் 2011-ன் கீழ், பல்வேறு நலத் திட்ட உதவிகள் பெறுவதற்கான விண்ணப்பங்கள் கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர்,
வட்டாட்சியர் ஆகியோரது அலுவலகங்களில் சம்பந்தப்பட்ட அலுவலர்களால் பெறப்பட்டு வருகின்றன.
இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் அளிக்க கல்வி உதவித்தொகை பெற கல்வி ஆண்டு தொடங்கப்பட்ட 6 மாதங்களுக்குள், திருமண உதவித்தொகை பெற திருமண
தேதிக்கு முந்தைய 3 மாதங்களுக்குள் அல்லது திருமண தேதிக்குப் பிறகு வரும் 6 மாதங்களுக்குள் இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு உதவித்தொகை பெற இறந்த
தேதியிலிருந்து 6 மாதங்களுக்குள், விபத்து மரணம் மற்றும் ஈமச்சடங்கு, விபத்து காயமடைந்ததற்கான உதவித்தொகை பெற சம்பவ நாளிலிருந்து 6 மாதங்களுக்குள் காவல்
துறையினரின் விபத்து அறிக்கையுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
முதியோர் உதவித் தொகை, ஆதரவற்ற விவசாய கூலித் தொழிலாளர் உதவித் தொகை பெற விண்ணப்பிக்க கால அவகாசம் இல்லை. மேற்கண்ட கால அளவிற்குள்
விண்ணப்பம் அளிக்க இயலாத விண்ணப்பதாரர், காலதாமதமாக மனு செய்ததற்கான காரணங்களை கணக்கில் கொண்ட பின், தாமத மனுக்களின் மீது உயர்
அலுவலர்களுக்கு ஒப்புதல் வழங்க தமிழக அரசால் அதிகாரம் அளிக்கப்படுகிறது.
அதனடிப்படையில், குறிப்பிடப்பட்ட கால அவகாசத்துக்குப் பிறகு பெறப்படும் விண்ணப்பங்களை பரிசீலிக்க, பெரம்பலூர் சார் ஆட்சியருக்கு 3 மாதங்கள் வரையிலும், மாவட்ட
வருவாய் அலுவலருக்கு 3 மாதங்களிலிருந்து 6 மாதங்கள் வரையிலும், மாவட்ட ஆட்சியருக்கு 6 மாதங்களிலிருந்து 1 ஆண்டு வரை தாமத மனுக்களின் மீது ஒப்புதல்
அளிக்க அதிகாரம் அளிக்கப்படுகிறது.
5.8.2014 தேதிக்கு முன் பெறப்பட்ட நிலுவை மனுக்களின் மீது கால அவகாசம் பொருந்தாது. மேலும், உழவர் பாதுகாப்புத் திட்டம் 2011-ன் கீழ் விபத்து மரணம் மற்றும்
ஈமச்சடங்குக்கான உதவித் தொகையானது பாம்புக்கடி உள்ளிட்ட விஷக்கடி, மின்னல் மற்றும் வெள்ளம் ஆகிய காரணங்களால் எதிர்பாராதவிதமாக ஏற்படும் உயிரிழப்பைக்
கூட விபத்து மரணமாக கருதி விபத்து நிவாரணம் வழங்கப்படும். மேற்கண்ட காரணங்களில் ஏற்படும் விபத்து குறித்து காவல் துறையினரிடமிருந்து பெறப்பட்ட
அறிக்கையுடன், சமூக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியரிடம் விண்ணப்பிக்க வேண்டும் என்றார் அவர்.

சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய பன்னாட்டு முனையத்தில் 28–வது முறையாக மேற்கூரை இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நவீன முனையங்கள்
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக நவீன வசதிகளுடன் கூடிய உள்நாட்டு மற்றும் பன்னாட்டு முனையங்கள் கட்டப்பட்டன. 2 ஆண்டுகளாக புதிய உள்நாட்டு மற்றும் பன்னாட்டு முனையங்கள் செயல்படுகின்றன. ஆனாலும் இந்த விமான நிலையங்களில் கண்ணாடிகளும், மேற்கூரைகளும் அடிக்கடி தொடர்ந்து இடிந்து விழுந்து வருகின்றன.
இந்த 2 ஆண்டுகளில் இதுவரை 8 முறை மேற்கூரைகளும், 7 முறை கண்ணாடி கதவுகளும், 8 முறை தடுப்பு கண்ணாடிகளும், 4 முறை சுவற்றில் பதிக்கப்பட்ட கிரானைட் கற்களும் உடைந்து விழுந்துள்ளன. இதுவரை எந்த பயணிகளுக்கோ, ஊழியர்களுக்கோ எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.
28–வது முறையாக இடிந்தது
சென்னை விமான நிலையத்தில் பன்னாட்டு வருகை பகுதியில் உள்ள குடியுரிமை சோதனை செய்யும் இடத்தில் உள்ள மேற்கூரை நேற்று இடிந்துவிழுந்தது. அதில் 3 அடி உயரமும் 3 அடி அகலமும் கொண்ட ஒரு பகுதி இடிந்து விழுந்துவிட்டது.
இதுபற்றி தகவல் அறிந்ததும் விமான நிலைய அதிகாரிகள் வந்து உடைந்த பகுதிகளை அகற்றினார்கள். மேலும் அப்போது பிரான்ஸ்சில் இருந்து டெல்லி வழியாக பயணிகள் வந்திருந்தனர். அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை. விமான நிலையத்தில் 28–வது முறையாக மேற்கூரை விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை எற்படுத்தியது.
தொடரும் இந்த அவலநிலைக்கு எப்போது விமோசனம் கிடைக்கும் என்று பயணிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
தமிழகத்தில் பள்ளி கல்வி இயக்குனரகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் நேரடியாக நிரப்பப்பட உள்ள 652 Computer Instructor பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: தமிழ்நாடு ஆசிரியர் பணியாளர் தேர்வாணையம்.
மொத்த காலியிடங்கள்: 652
பணி: Computer Instructor
சம்பளம்: மாதம் ரூ.9300 – 34800 + தர ஊதியம் ரூ.4600
வயதுவரம்பு: 01.07.2014 தேதியின்படி 56க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: BE, B.Sc (கம்ப்யூட்டர் சயின்ஸ்), BCA, B.Sc (தகவல் தொழில்நுட்பம்) உடன் பி.எட் முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறியhttp://trb.tn.nic.in/Comp%20Instructor%202014/13102014/Notification.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.