பெரம்பலூர் அருகே அடையா ளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் பலி!
பெரம்பலூர், செப். 4:
பெரம்பலூர் அருகே அடையா ளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் ஒருவர் பலியானர். அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது எதிர்பாராமல் நேர்ந்த விபத்தில் பலியா னாரா? என பெரம்பலூர் போலீசார் விசா ரணை நடத்தி வருகிறார்கள்.
பெரம்பலூர் அருகே திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஆர்டிஓ ஆபீஸ் எதிரே இன்று காலை 6 மணியளவில் வாலிபர் ஒருவர் தலைப்பகுதியில் காயத்துடன் இறந்து கிடப்பதாக பெரம்பலூர் போலீசுக்கு தகவல் வந்தது.
உடனடியாக பெரம்பலூர் டிஎஸ்பி சுருளியாண்டி தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்து கிடந்த வாலிபரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த வாலிபர் யார்? எந்த ஊரைச்சேர்ந்தவர் என்ற விவரங்கள் உடனடியாக தெரியவில்லை.
இறந்து கிடந்த வாலிபருக்கு 30 வயது இருக்கும். நீல நிறத்தில் கட்டம் போட்ட கைலியும், சந்தன நிறத்தில் கோடு போட்ட சட்டையும் அனிந்திருந்தார். அவரை கொலை செய்து இப்பகுதியில் கொண்டு வந்து வீசி சென்றார்களா? அல்லது எதிர்பாராமல் நிகழ்ந்த சாலை விபத்தில் இறந்தாரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.திருச்சி&சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாலிபர் ஒருவர் தலைப்பகுதியில் காயத்துடன், ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Category: மாணவர் பகுதி
0 comments