.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

தற்கொலைகளின் எண்ணிக்கை அதிகரிக்க ஊடகங்களும் காரணம்!

Unknown | 12:19 AM | 0 comments

“கடந்த 10 ஆண்டுகளில் 25% தற்கொலைகள் அதிகரித்துள்ளன. ஆண்டுக்காண்டு விவசாயிகளின் தற்கொலை அதிகரித்துவருகிறது. மாணவர்கள் தற்கொலையும் அதிகரித்துவருகிறது. பெற்றோரின் அரவணைப்பு இல்லாததே மாணவர்களின் தற்கொலைக்கு காரணம். தமிழகத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் அதிக மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள். விகிதாச்சார அடிப்படையில் புதுச்சேரியே அதிக தற்கொலை நடக்கும் மாநிலமாக உருவெடுத்திருக்கிறது. 1 லட்சம் பேரில் 36.8 பேர் அங்கு தற்கொலை செய்து கொள்கிறார்கள், கடந்த ஆண்டு அங்கு 541பேர் தற்கொலை செய்துள்ளார்கள். இளம் பெண்கள் தற்கொலையில் தஞ்சை முதன்மை வகிக்கிறது. மத்திம வயது ஆண்கள் தற்கொலையில் கோவைக்கு முதலிடம்.கடந்தாண்டு அதிக தற்கொலை நடந்த நகரங்களில் சென்னையே முதன்மை வகிக்கிறது. ” என்ரெல்லாம் முன்னரே செய்திகள் வெளிவந்த நிலையில் ஊடகங்கள் விலாவாரியாக தற்கொலைச் செய்திகளை வெளியிடுவதும் தற்கொலைகளை அதிகப்படுத்துவதாக உலகச் சுகாதார மையம் தெரிவித்துள்ளது.
suicide social-media

உலகம் முழுக்க அதிகரித்து வரும் தற்கொலைகளைத் தடுக்கலாம் என்று கூறும் உலகச் சுகாதார மையத் தலைவர், “இது போன்ற தற்கொலைச் செய்திகளை ஊடகங்கள் எந்த வித ஃபீலிங்கும் இல்லாமல் பரபரப்பு மனோபாவத்துடன் வெளியிடுகிறது. குறிப்பாக புகழ்பெற்றவர்கள் தற்கொலை செய்து கொண்டால், அதை விலாவாரியாக விவரிக்கின்றனர், மேலும் விசித்திரமான தற்கொலை முறைகளையும் விவரித்து வெளியிடுகின்றனர். எந்த விதத்தில் ஒருவர் தற்கொலை செய்து கொள்கிறார் என்பதை விவரித்து புகைப்படத்தையும், முடிந்தால் வீடியோவையும் வெளியிடுகின்றனர். அனைத்தையும் விட குறிப்பிட்ட சூழ்நிலையில் தற்கொலை சரியே என்ற தொனியில் ஏற்றுக் கொள்ளகூடிய ஒன்று என்ற விதத்திலும் கருத்துக்களை உருவாக்குகின்றனர்” என்று குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் அதிக வசதி படைத்த உள்ள நாடுகளில் தற்கொலைகள் சற்றே கூடுதலாக உள்ளது. அதாவது இத்தகைய நாடுகளில் 1 லட்சம் பேர்களில் 12 பேர் தற்கொலை செய்துகொள்கின்றனர். வசதி குறைவான நாடுகளில் தற்கொலை அதிகம் என்றாலும் வசதி படைத்த நாடுகளை ஒப்பிடும்போது குறைவாக உள்ளது.
மொத்தத் தற்கொலைகளில் தெற்காசிய நாடுகளான, இந்தியா, இந்தோனேசியா, வடகொரியா மற்றும் நேபாளம் மூன்றில் ஒரு பங்கு ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
தற்கொலை செய்து கொள்ளும் முறைகளில் பூச்சி மருந்து, தூக்கிட்டுக் கொள்ளுதல், ஆயுதப் பயன்பாடு ஆகியவை பெரிதும் பங்களிப்பு செய்தாலும் ஆசிய நாடுகளில் உயரமான கட்டிடத்திலிருந்து குதித்துத் தற்கொலை செய்து கொள்வது பிரதானமான முறையாக இருந்து வருகிறது.
இதில் ஆண்களின் தற்கொலை பெண்களின் தற்கொலையைக் காட்டிலும் இருமடங்கு அதிகம்.அதிக தற்கொலை நடக்கும் நாடுகளில் கயானா முதன்மை வகிக்கிறது. இங்கு 1 லட்சம் பேரில் 44 பேர் தற்கொலை செய்து கொண்டு இறக்கின்றனர். வடகொரியா, தென் கொரியா அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
அதற்கு அடுத்த இடத்தில் இலங்கை இங்கு 1 லட்சத்தில் 28 பேர் தற்கொலை செய்துகொள்கின்றனர். இந்தியாவில் லட்சத்தில் 21 பேர் தற்கொலையால் மடிகின்றனர்.வசதி படைத்த நாடுகளில் மன உளைச்சல், சோர்வு காரணமாக 90 சதவீதத்தினர் தற்கொலை செய்து கொள்கின்றனர். இந்தியா, சீனாவில் தற்கொலை செய்து கொள்பவர்களில் மன உளைச்சல், சோர்வு காரணமாக தற்கொலையைத் தேர்ந்தெடுப்பவர்கள் 60 சதவீதம்.வசதி படைத்த நாடுகளாக இருந்தாலும் ஏழை நாடுகளாக இருந்தாலும் தற்கொலை செய்து கொள்பவர்கள் பெரும்பாலும் சமுதாயத்தில் பொருளாதார நிலைகளில் மிகவும் பின் தங்கியவர்களே என்று கூறுகிறது இந்த ஆய்வு.

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1