.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

முகம்மது நபியின் ‘டோம்’ அகற்றப்படும் செய்தி பொய்யானது-சவுதி!

Unknown | 3:43 PM | 0 comments






-

மதீனா: சவுதி அரேபியாவில் பாரம்பரிய சின்னங்களை அரசாங்கம் அழித்து வருகின்றது எனவும், இதன் ஒரு கட்டமாக நபி (ஸல்) அவர்களின் மண்ணரையின் மேல் அமைக்கப்பட்டுள்ள பச்சை நிறத்திலான டோம் தகர்க்கப்பட இருக்கின்றது எனவும் வெளிவந்த செய்தி பொய்யானவை என சவுதி அரேபியா தெரிவித்துள்ளது.

பிரித்தானிய இண்டிபெண்டன் நாளிதழுக்கு எழுதியிருந்த ஓர் அரபி எழுத்தாளரால் இக்கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டிருந்தன. உண்மை அறியாமல் தனது சொந்தப் புத்திக்கு ஏற்ப அவர் தெரிவித்திருந்த கருத்தை இஸ்லாமிய அறிவற்ற குறித்த பத்திரிகை செய்தியாக புணைந்திருந்தது.

மேலும் முகம்மது நபியின் ஜனாஸா தோண்டப்பட்டு ஜன்னத்துல் பகீ மையவாடியில் அவரது தோழர்களின் மண்ணறைகளின் அருகாமையில் மறைவிடமொன்றில் மீண்டும் அடக்கம் செய்யப்படும் என்றும் அக்கட்டுரையில் எழுதியிருந்தார்.



இது எழுத்தாளரின் அறியாமையும், கருத்துக்கள் அவரது சொந்தப் புத்திக்குட்பட்டதுமே என சவுதி அரேபியா தெரிவித்துள்ளது.

குறித்த டோம் ஹிஜ்ரி 678ல் முதன் முதலாக கட்டப்பட்டது. அதன் பின்னர் உஸ்மானிய ஆட்சியில் இரண்டாம் சுல்தான் மஹ்மூட் என்பரவின் ஆட்சிக்குட்டபட்ட 1228ம் ஆண்டு குறித்த டோம் மீள் திருத்தப்பட்டு பச்சை வர்ணமும் பூசப்பட்டிருந்தாக மதீனா மற்றும் மஸ்ஜிதுன் நபவி வரலாற்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.


நபி டோமின் பழைய தோற்றம்

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1