பெரம்பலூர் மாவட் டத்தில் வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்!
பெரம்பலூர் மாவட் டத்தில் உள்ள வேலை வாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தரேஸ் அஹமது தெரி வித்துள்ளார்.
இது குறித்து அவர் விடுத் துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:–
வேலை வாய்ப்பற்றோர்
பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி பயின்று தேர்ச்சி யடையா தவர்கள் முதல் பட்டதாரிகள் வரை வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து தொடர்ந்து ஐந்து வருடங் களுக்கு மேலாக வேலை வாய்ப்பின்றி காத்தி ருக்கும் பதிவுதார ர்களுக்கு வேலை வாய்ப்பற்ற இளைஞர் களுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் பெரம்பலூர் மூலம் விண்ணப்பப் படிவங்கள் வழங்கப் படுகிறது. அதற்கான தகுதி மற்றும் இதர விவரங்கள் பின்வருமாறு:–
வயது வரம்பு
கல்வித் தகுதியை பதிவு செய்து ஐந்து வருடங்கள் முடிவடைந்தவராக இருக்க வேண்டும். அதாவது 30.06.2009 க்கு முன்னர் பதிவு செய்தவராக இருக்க வேண்டும். மனுதாரர் தனது வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டையை தவறாது தொடர்ந்து புதுப் பித்து வந்திருக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட பழங்குடி யினத்தவர்கள் 30.06.2014 தேதியில் 45 வயதைக் கடந்த வராக இருத்தல் கூடாது. மற்ற வகுப்பினர்கள் அதே போன்று 40 வயதைக் கடந்தவராக இருத்தல் கூடாது.
குடும்ப வருமானம்
மனுதாரருடைய குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ.50 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். மனுதாரர் எந்த ஒரு கல்வி நிறுவ னத்திலும் சேர்ந்து கல்வி பயிலும்மாணவ –மாண வியராக இருத்தல் கூடாது. ஆயினும் தொலை து£ரக் கல்வி பயிலுபவராக இருக் கலாம். மனுதாரர் சுயமாக தொழில் செய்பவ ராகவோ, சுயமாக சம்பா த்தியம் செய்பவ ராகவோ இருத்தல் கூடாது.
புதிய விண்ணப் பப்படிவம் வழங்கப்பட்டு பூர்த்தி செய்த படிவங்கள் 24.08.2014 வரை அலுவலக வேலை நாட்களில் பெறப் படும். மனுதாரர் விண்ணப் பப்படிவம் பெற்றுக் கொள் வதற்கு அனைத்து கல்வி சான்றி தழ்கள், மாற்றுச் சான்றிதழ் வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை போன்ற அசல் ஆவணங் களுடன் வருகை தர வேண்டும்.
இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.
Category: மாவட்ட செய்தி
0 comments