கல்வி! கல்வி!!
அயல் மொழிகள் கற்க விருப்பமா?
பெங்களூர் பல்கலைக்கழகம் மாணவர் சேர்கைக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
வழங்கப்படும் படிப்புகள்
பிரெஞ்சு, ஜெர்மன், ஸ்பானிஷ், இத்தாலி, போர்ச்சுக்கீஷ், ஜப்பான், சீனம், கொரியா, பின்னிஷ், ரூஷ்ய மற்றும் அரேபிய மொழிகள் சான்றிதழ், பட்டய, உயர்நிலை பட்டய மற்றும் மேம்பட்ட பட்டய படிப்புகளாக வழங்கப்படுகிறது.
விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள்: 01 ஜூலை 2014.
மேலும் கூடுதல் தகவல்களுக்கு www.bangaloreuniversity.ac.in/faculties/art_dept_foreign_language.aspx என்ற இணைய பக்கத்தை காணலாம்
------------------------------------------------------------------------------------------------------------
நிதி மேலாண்மை படிக்க விருப்பமா?
டில்லியில் இயங்கி வரும் இந்திய நிதிக் கல்வி நிறுவனம் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
வழங்கப்படும் படிப்பு: முதுநிலை பட்டய மேலாண்மை (நிதி)
காலம்: 2 ஆண்டுகள்.
தகுதி
இளநிலை படிப்பில் 50 விழுக்காடு மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
கேட் / எக்ஸாட்/ சிமேட் மதிப்பெண்கள் பெற்றிருந்தால் அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
மேலும் கூடுதல் தகவல்களுக்கு www.registration.iif.edu என்ற இணையதளத்தைக் காணவும்.
------------------------------------------------------------------------------------------------------------
முனைவராகலாம் வாருங்கள்...
புது டில்லியில் இயங்கி வரும் ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகம் ஆய்வுப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
வழங்கப்படும் படிப்பு: பிஎச்.டி.
விண்ணப்பங்களை இணையதளம் வழியாகப் பெற்றுக்கொள்ளலாம்.
விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள்: 15 ஜூலை 2014.
மேலும் கூடுதல் தகவல்களுக்கு www.jmi.ac.in என்ற இணையதளத்தைக் காணவும்.
Category: உயர் கல்வி
0 comments