சட்டம் மற்றும் கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம்!!
சென்னை:சட்டம்மற்றும்கால்நடைமருத்துவ அறிவியல் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் இன்று முதல்(மே 12) வினியோகிக்கப்படுகின்றன.
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலை., சார்பில், பல்கலை மற்றும் தமிழகத்தில் உள்ள ஏழு சட்டக் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை, சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
இதில், ஐந்தாண்டு பி.ஏ. பி.எல்., ஹானர்ஸ் மற்றும் பி.காம். பி.எல்., ஹானர்ஸ் படிப்புகளுக்கான சேர்க்கைக்கு, இன்று முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.

கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை மற்றும் மாவட்டங்களில் உள்ள கால்நடை மருத்துவ அறிவியல் மையங்களில் விண்ணப்பங்கள் கிடைக்கும். எனவே, மாணவர்கள் முன்கூட்டியே சென்று விண்ணப்பங்களை பெற்று, நிதானமாக பூர்த்திசெய்து, கடைசிநேர டென்ஷனை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
Category: உயர் கல்வி
0 comments