தினமும் இளநீரைக் குடித்து வந்தால் செரிமானம் சீராக நடைபெறும்!!
நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே போகிறது. இத்தகைய வெப்பத்தை தணிப்பதற்கு பல்வேறு பானங்களை வாங்கிப் பருகுவோம். ஆனால் இருப்பதிலேயே இளநீர் தான் மிகவும் சிறந்தது. இதில் எந்த ஒரு கலப்படமும் இல்லாததால், இதன் கிடைக்கும் நன்மைகள் பல.
அதிலும் இளநீர் உடலில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு மட்டுமின்றி, அழகிற்கு கேடு விளைவிக்கும் பிரச்சனைகளையும் சரிசெய்யும் குணம் வாய்ந்தவை. ஆகவே உடலில் பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க தினமும் ஒரு இளநீரை பருகி வாருங்கள்.
மேலும் சருமம் மற்றும் கூந்தலுக்கு எந்த ஒரு பிரச்சனையும் நேராமல் இருக்க வேண்டுமானால், இளநீரை நேரடியாக பாதிப்படைந்த இடத்தில் பயன்படுத்தலாம். இளநீரை தினமும் குடித்து வந்தால், அது இரத்த ஓட்டத்தை சீராக வைத்து, இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும்.
கோடை காலத்தில் இளநீரை தினமும் குடித்து வந்தால், உடலின் எனர்ஜியானது குறையாமல் இருக்கும். இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள தினமும் இளநீரை வெறும் வயிற்றில் குடித்து வர வேண்டும். சிறுநீரகக்கல் பிரச்சனை உள்ளவர்களுக்கும் இளநீர் ஒரு சிறந்த பானமாகும்.
செரிமான பிரச்சனை உள்ளவர்கள், தினமும் இளநீரைக் குடித்து வந்தால் செரிமானம் சீராக நடைபெறும். வயிற்றுப்போக்கு ஆகிய காலங்களில் உடலில் உள்ள நீர்ச்சத்தானது குறையும். ஆகவே அப்போது இளநீரைக் குடித்தால், உடலில் உள்ள நீர்ச்சத்தின் அளவை அதிகரிக்கலாம்.
இளநீரைக் குடித்து வந்தால், உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இளநீரில் கால்சியம் அதிகம் இருப்பதால், இதனை தவறாமல் தினமும் குடித்து வர, எலும்புகளில் பிரச்சனை ஏற்படாமல், எலும்புகள் நன்கு வலுவோடு இருக்கும்.
Category:
0 comments