.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

2014ம் ஆண்டின் பிரபலமான பணிகள் எவை? - ஒரு அலசல்!!

Unknown | 10:17 PM | 0 comments

எப்போதும் மாறிக்கொண்டே இருக்கும் காலத்தில், பணி வாய்ப்புகளும் கூட, தொழில்நுட்பம் மற்றும் சமூக முன்னேற்றங்களுக்கு ஏற்ப, பெரியளவில் மாற்றமடைந்து வருகின்றன.
இக்கட்டுரை, இந்த 2014ம் ஆண்டின் 5 முக்கிய பணிகள் பற்றி விவரிக்கிறது. அப்பணிகள், இந்தாண்டின் முதல் 5 பிரதான பணிகள் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளன.
மார்க்கெட் ஆராய்ச்சி அனலிஸ்ட் மற்றும் மார்க்கெடிங் ஸ்பெஷலிஸ்ட்
இன்றைய நிலையில், பெரியளவில் திகழும் நுகர்வு கலாச்சாரத்தில், நுகர்வோரை சார்ந்த துறை அதிக முக்கியத்துவம் பெறுவதில் வியப்பேதும் இல்லை. அந்த வகையில், மேற்கண்ட பணிக்கான முக்கியத்துவம் கூடுதலாக இருக்கும் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
நுகர்வோரின் எண்ணங்கள் மற்றும் விருப்பங்கள் ஆகியவற்றைப் பொறுத்து, சந்தையில் ஒரு பொருளுக்கான முக்கியத்துவம் அமைகிறது. அதனடிப்படையில், அதற்கான வழங்கல் மற்றும் போக்குவரத்து போன்றவை நிகழ்கின்றன.
மார்க்கெட் ஆராய்ச்சி அனலிஸ்டுகள் மற்றும் மார்க்கெடிங் ஸ்பெஷலிஸ்டுகள், நுகர்வோரின் மாறும் விருப்பங்கள் மற்றும் தேவைகளை பகுப்பாய்வு செய்து, அதற்கேற்ப வியூகங்களை அமைத்து, ஒரு பொருளின் விற்பனையை அதிகப்படுத்துகிறார்கள்.
Software Developer
அன்றாட வாழ்க்கை செயல்பாடுகளில், கணினி என்ற மந்திர சாதனத்தின் முக்கியத்துவம் தொடர்ந்து அதிகரித்து வரும் வேளையில், அதன் செயல்பாட்டிற்கான Software Developer -களின் முக்கியத்துவம் பெருமளவு அதிகரிக்கிறது.
ஒருவர் Software Developer  என்ற நிலையை அடைய விரும்பினால், அவர், B.Tech., Computer Application அல்லது MCA ஆகிய படிப்புகளில் ஒன்றை நிறைவுசெய்திருக்க வேண்டும். கடந்த மூன்று ஆண்டுகளாக, இத்துறை பெரியளவில் வளர்ச்சி கண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ராணுவம்
ஒவ்வொரு நாட்டிற்கும், ராணுவம் என்பது எந்த நிலையிலும் தவிர்க்கவே முடியாத ஒரு அம்சம். ராணுவத்தில், வீரர் பணிதான் என்றில்லை. தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சிகள் சார்ந்து ஏராளமான பணி நிலைகள் உள்ளன. அவற்றில் சம்பளமும், சலுகைகளும் மிக அதிகம்.
இங்கே, பொருளாதார மந்தநிலையால் ஆள் குறைப்பு, வேலையின்மை உள்ளிட்ட எந்த பிரச்சினைகளும் கிடையாது. 100% பணி உத்தரவாதம் உண்டு. எனவே, பாதுகாப்புத் துறையில், தனக்கு விருப்பமான பிரிவை தேர்ந்தெடுத்து, ஒருவர் தாராளமாக செல்லலாம்.
மெக்கானிக்கல் இன்ஜினியரிங்
தொழில்நுட்பம் சார்ந்த உலகில், தவிர்க்கவே முடியாத அம்சங்களில் முக்கியமானது மெக்கானிக்கல் இன்ஜினியரிங். தொழில்நுட்பங்களுக்கு ஒரு அடிப்படையாக இத்துறை விளங்குகிறது. மெக்கானிக்கல் இன்ஜினியர்கள், பகுப்பாய்வு, வடிவமைப்பு, உற்பத்தி மற்றும் மெக்கானிக்கல் அமைப்புகளை பராமரித்தல் உள்ளிட்ட பல்வேறான பணிகளை மேற்கொள்கிறார்கள். தற்போதைய நிலையில், இத்துறையில் 6% வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.
உணவு சேவைகள்
உணவு இல்லையேல், இந்த உலகம் இல்லை. அனைவருமே, உணவுக்காகவே உழைக்கிறார்கள். ஆனால், விருந்தோம்பல் துறையில் பணிபுரிவது எப்படிப்பட்ட அனுபவத்தை தரும் என்பதை பார்க்க வேண்டும். விருந்தோம்பல் துறை என்பது, எப்போதுமே மவுசு குறையாத துறைகளில் ஒன்று. முக்கியமானதும்கூட.
வரும் நாட்களில், இத்துறையில் 12% வளர்ச்சி ஏற்படும் என்று கூறப்படுகிறது. சுற்றுலாத் துறையுடன் இத்துறை நெருங்கிய தொடர்புடையது. இது நல்ல வருமானம் தரக்கூடிய ஒரு துறையும்கூட. இத்துறையில் பல நிலைகளில் பணி வாய்ப்புகள் உள்ளன. இதுஒரு பரந்து விரிந்த பெரிய துறையாகும்.

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1