2014 லோக்சபா தேர்தல் செலவு ரூ.3,426 கோடி -1952 முதல் புள்ளிவிபரம்!!
முதன்முறையாக லோக்சபா பொதுத்தேர்தல் நடைபெற்ற போது செலவிடப்பட்ட தொகையை விட 2009ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலுக்கான செலவு பல மடங்கு அதிகம் என்கிறது ஒரு புள்ளிவிபரம்.
1952 தேர்தலில் ரூ. 10.45 கோடிதான் நாட்டின் முதல் பார்லிமென்ட் தேர்தல் நடந்த 1952-ல் 10 கோடியே 45 லட்சம் ரூபாய்,
1957-ல் 5 கோடியே 90 லட்சம் ரூபாய்,
1962-ல் 7 கோடியே 32 லட்சம் ரூபாய்,
1967- 10 கோடியே 79 லட்சத்து 69 ஆயிரம் ரூபாய்,
1971-ல் 11 கோடியே 60 லட்சத்து 87 ஆயிரத்து 450 ரூபாய்,
1977-ல் 23 கோடியே 3 லட்சத்து 68 ஆயிரம் ரூபாய் செலவிடப்பட்டது.
1980-ல் 54 கோடியே 77 லட்சத்து 39 ஆயிரம் ரூபாய்,
1980-ல் 54 கோடியே 77 லட்சத்து 39 ஆயிரம் ரூபாய்,
1984-ல் 81 கோடியே 51 லட்சத்து 34 ஆயிரம் ரூபாய்,
1989-ல் 154 கோடியே 22 லட்சம் ரூபாய்,
1991-ல் 359 கோடியே 10 லட்சத்து 24 ஆயிரத்து 679 ரூபாய் செலவிடப்பட்டது.
1996-ல் 597 கோடியே 34 லட்சத்து 41 ஆயிரம் ரூபாய்,
1998-ல் 666 கோடியே 22 லட்சத்து 16 ஆயிரம் ரூபாய்,
ஆட்சிக் கலைப்பால் அதற்கு அடுத்த ஆண்டே, 1999-ல் நடந்த தேர்தலில் 880 கோடி ரூபாய் செலவிடப்பட்டது.
2004-ல் ஆயிரத்து 300 கோடி ரூபாய்,
2009-ல் ஆயிரத்து 400 கோடி ரூபாய் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
காரணம் தேர்தலுக்கான செலவு ஆண்டுக்காண்டு அதிகரித்து வருவதுதான் என்கின்றனர். முதல் தேர்தலின் போது 60 பைசாவாக இருந்த செலவு 2009ம் ஆண்டு அது 12 ரூபாயாக உயர்ந்துள்ளது.
Category: மாநில செய்தி
0 comments