நிலம் கையகப்படுத்தும் சட்டம் நாடு முழுவதும் இன்று முதல் அமலுக்கு வருகிறது!
புதுடெல்லி, ஜன.1-
நிலம் கையகப்படுத்தும் சட்டம், 1894-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. அதில், நிலம் கையகப்படுத்தியதால், நிலம் இழந்து இடம்பெயர்ந்தவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பது உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து எதுவும் கூறப்படவில்லை. எனவே, இந்த குறைபாடுகளை நீக்கி, புதிய நிலம் கையகப்படுத்தும் மசோதா கொண்டுவரப்பட்டது.
அம்மசோதா, பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் இரு அவைகளிலும் அபரிமிதமான மெஜாரிட்டியுடன் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, கடந்த செப்டம்பர் 27-ந்தேதி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்தார்.
இந்நிலையில், இந்த சட்டம் இன்று அமலுக்கு வருகிறது. இந்த சட்டத்தின்படி, நிலம் கையகப்படுத்தியதால், நிலங்களை இழந்தவர்களுக்கு நியாயமான இழப்பீடு வழங்கப்படும்.
அரசு-தனியார் கூட்டு திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்த நில உரிமையாளர்களில் 70 சதவீதம் பேரின் ஒப்புதலை பெறுவது கட்டாயம் ஆகும். தனியார் திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்த 80 சதவீத நில உரிமையாளர்களின¢ ஒப்புதல் அவசியம் ஆகும்.
இந்த சட்டத்தின்படி, நிலம் கையகப்படுத்துவதால் ஏற்படும் பிரச்சினைகளை விசாரிக்க மாநில அரசுகள் 6 விதமான குழுக்களை அமைக்க வேண்டியது கட்டாயம் ஆகும்.

Category: மாநில செய்தி
0 comments