.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

பெரம்பலூருக்கு கிடைத்த பெருமைமிகு கலெக்டர்.....!!

Unknown | 9:00 PM | 0 comments



பெரம்பலூர் மாவட்ட கலெக்டராக பணிபுரியும் தாரேஸ் அஹமது பற்றி நாம் இதற்கு முன்பு மூன்று முறை பதிவு போட்டுள்ளோம்.

இருப்பினும் இன்றைய மக்களுக்கு புதிய செய்தியுடன் பழைய செய்தியையும் சேர்த்தே தருகிறோம்.

பெரம்பலூர் மாவட்ட கலெக்டராக இருக்கும் தாரேஸ் அஹமது வை அந்த மாவட்ட மக்கள் தலையில் தூக்கி ஆடும் அளவுக்கு பல்வேறு அதிரடி திட்டங்கள், சிறப்பு திட்டங்கள் என கலக்கிவருகிறார்.

அந்த வகையில் மாறுவேடத்தில் திடீரென்று பேரூந்தில் பயணிக்கிறார்,

திடீரென்று தியேட்டருக்கு மாறுவேடத்தில் விஜயம் செய்து வரிசையில் நின்று டிக்கட்டில் இருக்கும் பணம் வசூல் செய்கிறார்களா அல்லது கூடுதல் பணம் வசூல் செய்கிறார்களா என்று பார்க்கிறார்.

இப்படி தொடர்ந்து அதிரடி விசிட் அடித்து அநியாயத்திற்கு எதிராக களம் இறங்குகிறார்.

இதேபோல் சமீபத்தில் நடுரோட்டில் பிச்சை எடுத்து கொண்டிருந்த 6 குழந்தைகளை மீட்டெடுத்து அவர்களுக்கு புதிய ஆடை வாங்கி கொடுத்து பள்ளிக்கூடத்தில் படிக்க வைத்தார்.

இப்படி ஒவ்வொரு நாளும் இவரின் அதிரடியால் நியாயத்திற்கு ஆதரவாகவும், அநியாயத்திற்கு எதிராகவும் சமூக போராளியை போன்று களம் இறங்கிவருகிறார்.

இந்நிலையில்...

மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளில் நடப்பதற்கு முடியாதபடியும், படுத்த நிலையிலும் இருக்கின்ற அனைத்து குழந்தைகளுக்கும் (90) தலா ரூ.2700 மதிப்பிலான ஏர்பெட் எனப்படும் காற்று படுக்கைகளை கலெக்டர் தாரேஸ் அஹமது இலவசமாக வழங்கினார்.

இப்படி தொடர்ந்து மக்கள் நல பணிகளில் தம்மை இரவு பகலாக உழைத்து வரும் தாரேஸ் அஹமதுவுக்காக நாம் இறைவனிடம் பிரார்த்தனை செய்ய கடமைப்பட்டுள்ளோம்.

அதேவேளையில்...

அதே பெரம்பலூரில் ஷரியா சட்டப்படி நடக்க இருந்த திருமணத்தை தடுத்து நிறுத்தினார்.

சட்டம் என்பது அனைவருக்கும் பொதுவானது. ஷரியா சட்டத்தை கடைபிடிக்க தெரியாத இந்த கலெக்டரை நாம் அப்பொழுதே வன்மையாக கண்டித்திருந்தோம்.

ஐஏஎஸ் படிக்க தெரிந்த இவருக்கு இந்திய சட்டம் அனுமதி வழங்கியுள்ள ஷரியா சட்டம் பற்றி அப்பொழுதே நாம் அவருக்கு பாடம் கற்றுக் கொடுத்து விட்டோம்.

அதையும் தாண்டி இனிமேல் ஷரியா சட்டத்தில் அவர் மூக்கை நுழைத்தால் பெரம்பலூர் மாவட்டத்தில் அவர் தமது பணியை தொடர முடியாது என்பதை அவருக்கு எச்சரிக்கையோடு சொல்லிக் கொள்கிறோம்.

இனிமேல் அதுமாதிரியான தவறுகளிலிருந்து தவிர்த்து கொண்டு மக்களுக்கு நன்மை செய்யும் இந்தியாவிலேயே நம்பர் 1 கலெக்டராக வருவதற்கு இறைவனிடம் பிரார்த்தனை செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம்.

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1