தமிழகத்தில் கன மழைக்கு 12 பேர் பலி : மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!
சென்னை வங்கக் கடலில் உருவான புயல் நேற்று பிற்பகல் நாகை அருகே கரை கடந்தது. அதை தொடர்ந்து கன மழை பெய்ததால் இதுவரை 12 பேர் பலியாகி உள்ளனர். கடலோர மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் உருவாகி இருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று காலை 11.30 மணியளவில் நாகைக்கு கிழக்கே 30 கிமீ தொலைவில் நிலை கொண்டிருந்தது. பின்னர், அது மேற்கு நோக்கி நகர்ந்து பிற்பகலில் நாகைக்கு வடகிழக்கே கரை கடந்தது. இதனால், வட, தென் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் கன மழை பெய்தது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நாகை, தஞ்சாவூர், காரைக்கால், திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் நேற்று இடைவிடாது பலத்த மழை கொட்டியது. மழை காரணமாக காரைக்கால், நாகை, திருவாரூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நேற்று விடுமுறை விடப்பட்டது. இரவு வரை மழை நீடித்ததால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மீனவர்கள் முடங்கினர்.
நாகை மாவட்டத்தில் கிடாரங்கொண்டான், பொறையார், மயிலாடுதுறை, சீர்காழியில் மின் கம்பங்கள் சாய்ந்ததால் 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருளில் மூழ்கின. தஞ்சையில் நேற்று தொடர்ந்து பெய்த மழை இரவு வரை நீடித்தது. இன்று வெயில் அடித்தது. கும்பகோணம் பகுதியில் நேற்றுமுன்தினம் முதல் விட்டு விட்டு மழை பெய்தது. சுவாமிமலை, பட்டீஸ்வரம் ஆகிய பகுதியில் பெய்த மழையால் சம்பா மற்றும் தாளடி நெற்பயிருக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.
டெல்டா மாவட்டங்களில் இடைவிடாது கொட்டிய மழையால் சாலைகளில் மெகா பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. வாய்க்கால், ஏரிகளில் அடைப்பு ஏற்பட்டதால் தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் மின்கம்பங்கள், மரங்கள் சாய்ந்து கிடக்கின்றன. இன்று வெயில் அடித்ததால் அனைத்து மாவட்டங்களில் மின்வாரியம், பொதுப்பணித் துறையினர் சீரமைப்பு பணிகளை தொடங்கி உள்ளனர்.
மழைக்கு 12 பேர் பலி:
கடலோர மாவட்டங்களில் கன மழை நீடித்ததால் மின்சாரம் தாக்கியும் கட்டிடம் இடிந்து விழுந்தும் இதுவரை 12 பேர் பரிதாபமாக பலியாகி உள்ளனர். அதன் விவரம்: திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை அருகே உள்ள சின்னப்புலியூரில் தனியார் நிறுவனத்துக்கு தொழிற்சாலை கட்டப்பட்டு வருகிறது. இங்கு வேலை செய்யும் தொழிலாளர்கள் ஷெட்டில் தங்கி உள்ளனர். நேற்று இரவு ஷெட்டில் தொழிலாளர்கள் இருந்தனர். அப்போது அருகில் புதிதாக கட்டப்பட்ட காம்பவுண்ட் சுவர் இடிந்து விழுந்தது. இதில் ஒடிசாவை சேர்ந்த சோனு, சர்தீன் உள்பட 6 தொழிலாளிகள் உடல் நசுங்கி இறந்தனர்.நாகை மாவட்டம் தரங்கம்பாடியை சேர்ந்தவர் பூமிநாதன். முன்னாள் மீனவ பஞ்சாயத்தார். இவரது 2 வயது மகன் விஷ்ணுபிரியன் நேற்று விளையாடி கொண்டிருந்தான். அப்போது வீட்டு கொல்லையில் இருந்த பள்ளத்தில் தேங்கியிருந்த மழை நீரில் விழுந்து பரிதாபமாக இறந்தான்.
இதேபோல் நேற்று நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள கடக்கம் கிராமத்தை சேர்ந்த ஹரிகிருஷ்ணன் மகன் கணேசன் (18) என்பவர் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த போது மின்சாரம் தாக்கி இறந்தார். தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே அணக்குடியை சேர்ந்த பிஎஸ்என்எல் தொழில்நுட்ப உதவியாளர் ரவிவர்மன் நேற்று அறந்து கிடந்த மின்கம்பியை மிதித்த போது மின்சாரம் தாக்கி இறந்தார். அவரை காப்பாற்ற முயன்ற அவரது தந்தை ராஜேந்திரனும் மின்சாரம் பாய்ந்து பலியானார். நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்த பொத்தனூரில் மழையால் வீடு இடிந்ததில் பிரதீஸ்வரி (45) என்ற பெண் உயிரிழந்தார்.
சென்னை வானிலை ஆராய்ச்சி மைய இயக்குனர் ரமணன் கூறியதாவது:
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் சனிக்கிழமை மதியம் நாகைக்கு அருகே வடகிழக்கு பகுதியில் கரையை கடந்தது. இதனால், காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறி திருச்சி அருகில் நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்துக்கு வட தமிழகத்தில் மழை பெய்யும், சில இடங்களில் கன மழை பெய்யும், சென்னையில் விட்டுவிட்டு மழை பெய்யும்.

Category: மாநில செய்தி

0 comments