.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நாளை மற்றும் வரும் 27ஆம் தேதி சிறப்பு முகாம்!

Unknown | 8:45 PM | 0 comments

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த, நீக்கம், பாகம் மாற்றம் செய்ய ஞாயிற்றுக்கிழமை (அக். 20) மற்றும் அக். 27-ம் தேதி சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது என்றார் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது. இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
1.1.2014-ம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு, 18 வயது நிறைவடைந்தவர்களும், வாக்காளர்  பட்டியலில் இடம் பெறாதவர்களும், வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்ப்பதற்கும்,  ஏற்கெனவே வாக்காளர் பட்டியலில் உள்ளவர்கள் தங்களது பெயர்களை திருத்தம், நீக்கம், பாகம் மாற்றம் செய்ய அக். 31-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.வாக்குச்சாவடி மையங்களில் (பள்ளிகளில்) காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களால் பெறப்படுகிறது.  மேலும், ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் சிறப்பு முகாம்களிலும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. எனவே, பெரம்பலூர் மாவட்டத்தைச் சோந்த பொதுமக்கள் இந்த வாய்ப்பை முறையாக பயன்படுத்திக்கொள்ளலாம்.


Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1