பெரம்பலூரில் தொழில்முனைவோர்களுக்கான விழிப்புணர்வு முகாம்!
பெரம்பலூர், செப்.29- பெரம்பலூரில் தொழில் முனைவோர்களுக்கான விழிப்புணர்வு முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர் சுப்பிர மணியன் தலைமையில் நடைபெற்றது. விழிப்புணர்வு முகாம் கதர் கிராமத் தொழில்கள் ஆணையம், மாவட்ட தொழில் மையம், கதர் கிராமத் தொழில் வாரியம் இணைந்து நடத்தும் பிரதம மந்திரியின் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம் பற்றி தொழில் முனைவோர்களுக்கான விழிப்புணர்வு முகாம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில்¢ மாவட்ட வருவாய் அலுவலர் சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பேசியதாவது: பிரதமமந்திரியின் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் முக்கிய நோக்கம், கிராமம் மற்றும் நகரப் பகுதிகளில், மக்களின் சொந்த இடத்திலேயே சொந்தமாக வேலை வாய்ப்பு உருவாக்குவது மற்றும் கிராமம் மற்றும் நகரப் பகுதிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்துவது ஆகும். பிரதம மந்திரியின் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட் டத்தில் மானியத்துடன் கூடிய கடன்களாக உற்பத்தி பிரிவில் அதிக பட்சம் ரூ.25- லட்சமும், சேவை பிரிவில் ரூ.10 லட்சமும வழங்கப் படுகிறது. இத்திட்டத்தின் கீழ் பயன் பெற பொது பிரிவிற்கு சொந்த முதலீடு திட்ட மதிப்பீட்டில் 10 சதவீதமும்¢, நலிவடைந்த பிரிவு, பழங்குடியினர், மலை மற்றும் எல்லைப்புறம் பிரிவு, இதர பிற்படுத்தப்பட்டோர், முன்னாள் ராணுவத்தினர், உடல் ஊனமுற்றோர் ஆகி யோருக்கு சொந்த முதலீடு திட்ட மதிப்பீட்டில் 5 சதவீத மும் ஆகும். இத்திட்டத்தில், அரசு மானியம் பொது பிரிவிற்கு திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதம் வரையிலும், நலி வடைந்த பிரிவு, பழங்குடியினர், மலை ஜாதி பிரிவு, இதர பிற்படுத்தப்பட்டோர், முன் னாள் ராணுவத்தினர், உடல் ஊனமுற்றோ£,¢ ஆகியோருக்கு திட்ட மதிப்பீட்டில் அதிக பட்சமாக 35 சதவீதம் வரை யிலும் கிடைக்கும் பிரதமமந்திரியின் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட் டத்தை கதர் கிராமத் தொழில் கள் ஆணையம,¢ மாவட்ட தொழில் மையம்,,கதர் கிராமத் தொழில் வாரியம் ஆகிய அரசு நிறுவனங்கள் இணைந்து நமது மாவட்டத்தில் செயல் படுத்துகின்றனர். கடந்த ஆண்டு இத்திட்டத் தின் கீழ் 31 பயனாளிகளுக்கு ரூ.27 லட்சத்து 50 ஆயிரம் மான்யமாக வழங்கப்பெற்று அதன் மூலம் 181 நபர்களுக்கு வேலைவாய்ப்¢பு உருவாக்கப் பட்டுள்ளது. ரூ.1 கோடியே 6 லடசம் இந்த ஆண்டு (2013-14) இத்திட்டத்தின் கீழ் நமது மாவட்டத்தில் 46 பயனாளி களுக்கு ரூ. 1 கோடியே 6லட்சம் மான்யமாக வழங்கி அதன் மூலம் 368 நபர்களுக்கு வேலைவாய்ப்¢பு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள் ளது.இந்த வாய்ப்பினை இளைஞர்கள்¢ மற்றும் தொழில் முனைவோர்களும் முறையாக பயன்படுத்திக்ககொள்ள வேண்டும். பெரம்பலூர் மாவட்டத்தின் பொருளா தாரத்தை பெருக்கும் வகை யிலும், தனி நபர் வருமானத்தை பெருக்கும் வகையிலும் செயல் பட்டு நமது மாவட்டத்தை தொழில் நகரமாக மாற்ற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.இந்நிகழ்¢ச்சியில் கதர்கிராம தொழில்கள் ஆணைய உதவி வளர்ச்சி அலுவலர் உமா சங்கர், வங்கி அதிகாரிகள் ராஜேந்திரன், சந்திரசேகரன், செல்வராஜ், மற்றும் தொழில் முனைவோர் கள், கைவினை கலைஞர்கள், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். |
Category: மாவட்ட செய்தி


0 comments