.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

'வாக்களிக்க விருப்பமில்லை' பட்டனை வாக்குப்பதிவு இயந்திரத்தில் பொருத்த வேண்டும் : உச்சநீதிமன்றம்!

Unknown | 12:18 AM | 0 comments

புதுடெல்லி: வேட்பாளரை நிராகரிக்கும் அதிகாரத்தை வாக்காளர்களுக்கு அளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் நீதிபதி தொடர்ந்த பொதுநல வழக்கு ஒன்று, உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. மனுவில், வாக்குபதிவு இயந்திரத்தில் வாக்காளர்கள் 'வாக்களிக்க விருப்பமில்லை' என்பதை தெரிவிக்கும் வகையில் தனியாக பட்டன் ஒன்றை பொருத்த தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என மனுதாரர் குறிப்பிட்டு இருந்தார். 

'வாக்களிக்க விருப்பமில்லை' பட்டனை பொருத்த வேண்டும்

வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஜனநாயக நாட்டில் வாக்காளர் அனைவருக்கும் வேட்பாளரை நிராகரிக்கும் அதிகாரம் அளிக்கப்பட வேண்டும் என தெரிவித்தனர். இதனை உறுதி செய்யும் வகையில், வாக்குபதிவு இயந்திரத்தில் வாக்காளர்கள் 'வாக்களிக்க விருப்பமில்லை' என்ற பட்டனை பொருத்த வேண்டும் எனவும் தேர்தல் ஆணையத்திற்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

வரும் தேர்தல்களில் நடைமுறைப்படுத்த நடவடிக்கை

இதனையடுத்து வரும் தேர்தல்களில் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் தேர்தல்களில் தகுதியான வேட்பாளரை நிறுத்த அரசியல் கட்சிகள் முன் வர வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர்.

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1