.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

பெரம்பலூரில் மழைவேண்டி முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை

Unknown | 9:59 PM | 0 comments

.

பெரம்பலூரில் மழை வேண்டி நூற்றுக் கணக்கான முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை செய்னர்.
சிறப்பு தொழுகை
பெரம்பலூரில் அனைத்து பள்ளிவாசல்கள் சார்பிலும் மழைவேண்டி சிறப்பு தொழுகை நடத்திட டவுன் ஜமாத் சார்பில் முடிவெடுக்கப் பட்டது. அதன்படி வடக்கு மாதவி சாலையில் உழவர் சந்தை அருகே உள்ள திடலில் முஸ்லிம்கள் நேற்று காலை சிறப்பு தொழுகை நடத்தி னர்.
இந்த வழிபாட்டிற்கு பேஸ் இமாம் டவுன் ஹஜ்ரத் முகம்மது சல்மான் தலைமை தாங்கினார்.
மழை வேண்டி
அப்போது இமாம்கள், ஹஜரத்துகள், பருவமழையும் பொய்த்துபோய், கோடை மழையும் இல்லாதநிலையில் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைத்து மக்களும் குடிநீருக்காக அவதிப் படுகிறோம். பயிர்விளைச்சல் இன்றி பாதிக்கப்பட்டுள்ள தால்,ஆடு,மாடு உள்ளிட்ட கால்நடை செல்வங்களுக்கு தண்ணீரும், பசுந்தீவனங்களும் இன்றி வறட்சியால் மடி கின்றன. காடுகளில் மான் உள்ளிட்ட வனஜீவராசிகள் தண்ணீர் இன்றியும், தீவனம் இன்றியும் மடிகின்றன. வறட்சிபஞ்சம்போக்கும் முகத்தான் இறைவா மழை தந்தருளாய் என்று துவா செய்து மனமுருகி வழிபாடு நடத்தினர்.
இதில் டவுன் பள்ளிவாசல், வடக்குமாதவி சாலை நூர் பள்ளிவாசல், மக்கா பள்ளிவாசல்,மவுலானா மதரசா பள்ளிவாசல், மதினா பள்ளிவாசல், ஆலம்பாடி சாலை அரபிக்கல்லூரி மதரசா மற்றும் துறைமங்கலம் பள்ளிவாசல் பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் இந்த சிறப்பு தொழுகையில் கலந்து கொண்டனர்.

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1