.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

எவ்வளவு மகத்தான பாரம்பரியத்தில் இருந்து நாம் வந்திருக்கின்றோம்! கேட்டத்தில் பிடித்தது!

Unknown | 7:30 PM | 0 comments


எவ்வளவு மகத்தான பாரம்பரியத்தில் இருந்து நாம் வந்திருக்கின்றோம்!
உமர் (ரலி) அவர்களின் ஆட்சிக்காலம் ஒரு நாள் அசர் தொழுகைக்குப் பிறகு, இரண்டு இளைஞர்கள் ஒரு பெரியவரை அழைத்துக் கொண்டு பரபரப்பாக வருகின்றனர், அந்த இளைஞர்கள்
“கலீபா அவர்களே, இந்தப் பெரியவர் எங்கள் தந்தைக் கொன்று விட்டார். இவருக்கு உடனடியாக மரண தண்டனை கொடுங்கள்”
“அமருங்கள்>>>> விசாரிப்போம் >>>”
“இல்லை, இல்லை இவர் எங்கள் தந்தையைக் கொலை செய்ததை நாங்கள் இருவரும் நேரடியாகப் பார்த்தோம்>>> உடனடியாக இவருக்கு தண்டனை கொடுங்கள்”
“பெரியவரே, இவர்கள் சொல்வது உண்மையா?”
“ஆம், நான் வெளியூர்க் காரன். எனக்கு இங்கே கொஞ்சம் நிலம் உள்ளது. எனக்கு நான்கைந்து குழந்தைகள். இந்த நிலத்திலிருந்து வரும் விளைச்சல் தான் எனது ஒரே வருமானம். இந்த இளைஞர்களின் ஒட்டகம் அடிக்கடி எனது தோட்டத்தில் புகுந்து எனது விளைச்சலை நாசம் செய்து விடுகிறது. பலமுறை இவர்களின் தந்தையாரிடம் நான் முறையிட்டும் எந்த பலனும் இல்லை. சம்பவத்தன்று அவர்களின் ஒட்டகம் எனது வயலில் மேய்ந்து கொண்டிருந்தது. மேட்டில் நின்ற நான் ஒரு கல்லை எடுத்து ஒட்டகத்தை நோக்கி எறிந்தேன். அந்தச் சமயத்தில் அங்கு வந்த இவர்களின் தந்தையின் தலையின் மீது மீது அந்தக் கல் பட்டு அதனால் காயமுற்ற அவர் மரணமடைந்து விட்டார். இது தான் நடந்தது. இதற்கான தண்டனை என்ன என்பது எனக்குத் தெரியும்.
“இளைஞர்களை நோக்கிப் பார்வையைத் திருப்பினார்கள் உமர்(ரலி)”
“கலிபா அவர்களே, நாங்கள் இவரை மன்னிக்க மாட்டோம், உடனடியாக தண்டனை கொடுங்கள்”
பெரியவர் ”கலிபா அவர்களே, எனக்கு மூன்று நாள் அவகாசம் வேண்டும். நான் எனது ஊருக்குச் சென்று எனக்கு கிடைக்கவிருக்கும் மரண தண்டனையை எனது வீட்டாரிடம் தெரிவித்து விட்டு சில பணிகள் இருக்கின்றன அவற்றை முடித்து விட்டு திரும்பி வந்து தண்டனையை ஏற்றுக் கொள்கிறேன்”
“தோழர்களே, இந்தப் பெரியவரை இங்கிருப்போர் யாருக்காவது தெரியுமா?”
“தெரியாது”
“இவருக்கு யாராவது ஜாமீன் தரத் தயாரா?”
நீண்ட மௌனம், யாரும் முன்வரவில்லை!
கலிபா அவர்களின் முகத்தில் கவலை படிகிறது
அப்போது, நபித்தோழர் அபூதர் கிபாரி (ரலி) அவர்கள் எழுந்து “மூமீன்களின் தலைவரே, நான் இந்த முதியவருக்கு பொறுப்பேற்றுக் கொள்கிறேன்”
“பெரியவரே, உங்களுக்கு மூன்று நாள் அவகாசம். சென்று வாருங்கள்.”
அவை கலைகிறது..!
மூன்றாம் நாள் அசர் தொழுகை முடிகிறது> வழக்குரைத்த இளைஞர்கள், நபித் தோழர்கள் என அவை களை கட்டுகிறது. நேரம் செல்கிறது. பெரியவர் வரவில்லை! அனைவர் முகத்திலும் கவலை.! ஒவ்வொருவராக வெளியே சென்று பார்க்கிறார்கள். கண்ணுக கெட்டிய தூரம் வரை யாரும் இல்லை! அபூதர் கிபாரி முகத்தில் மட்டும் மாறாத புன்னகை! மக்ரிப் நேரம் நெருங்குகிறது பரபரப்பு தொத்திக் கொள்கிறது!
உமர் அவர்களே எழுந்துபோய் பார்கிறார்கள். அந்தி சரியும் நேரம். தூரத்தில் அந்தப் பெரியவர்!
“அல்லாஹு அக்பர்” மகிழ்ச்சியின் மிகுதியால் உமர் அவர்கள்!
“அல்லாஹு அக்பர்” என்ற குரல் எங்கும் எதிரொலிக்கிறது.
இதோ பெரியவர்!! கலிபா அவர்களே, மன்னித்துக் கொள்ளுங்கள். சில பணிகளை முடிக்கத் தாமத மாக்கி விட்டது. எனது மரண தண்டனையை நிறைவேற்றுங்கள்!”
எங்கும் நிசப்தம்>>>>>>>!
“மூமீன்களின் தலைவரே,” அந்த இளைஞர்கள், உரத்த குரலில் “பெரியவரை நாங்கள் மன்னித்து விட்டோம்”
“அல்லாஹு அக்பர்” உமர் (ரலி) அவர்களின் குரல் விண்ணைப் பிளக்கிறது!
உமர் அவர்கள் தேம்பித் தேம்பி அழுகிறார்கள்!
உமர் (ரலி) “இளைஞர்களே, உங்கள் முடிவுக்கு என்ன காரணம்?”
“அமீருல் மூமினீன் அவர்களே, இந்த சமூகத்தில் மன்னிக்கும் குணமுடைய யாருமே இல்லை என்று நாளைய வரலாறு பேசக் கூடாது அல்லவா”
உமர் (ரலி)” என் இனிய தோழரே, யாருமே இந்த முதியவருக்கு ஜாமீன் தர முன் வராத போது, யாரென்றே தெரியாத இவருக்கு எப்படி ஜாமீன் தர முன் வந்தீர்கள்”
அபூதர்கிபாரி (ரலி) “அமீருல் மூமினீன் அவர்களே, உங்களது நீதி மிக்க ஆட்சியில் ஒரு ஏழைக்கு யாருமே ஜாமீன் தர முன் வரவில்லை என்று நாளைய வரலாறு பேசக் கூடாது அல்லவா”
உமர் (ரலி), “பெரியவரே, மரண தண்டனை நிச்சயம் என்று தெரிந்தும் எப்படித் திரும்பி வந்தீர்கள்?”
“அமீருல் மூமினீன் அவர்களே, உங்கள் ஆட்சியில் இறையச்சமில்லாத, வாக்குறுதியைப் பேணாத ஒருவன் வாழ்ந்தான் என்று நாளைய வரலாறு பேசக் கூடாது அல்லவா”
என்று சொன்னபோது ஓட்டு மொத்த சபையும் விம்மலில் கரைந்தது!

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1